தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘மரியாதையா கொடுத்திரு!’ – புது இயக்குநரை மிரட்டும் ‘அருவா’ ஹரி

Go down

‘மரியாதையா கொடுத்திரு!’ – புது இயக்குநரை மிரட்டும் ‘அருவா’ ஹரி Empty ‘மரியாதையா கொடுத்திரு!’ – புது இயக்குநரை மிரட்டும் ‘அருவா’ ஹரி

Post  ishwarya Tue Apr 23, 2013 1:15 pm

டைட்டிலே மிரட்டலா இருக்கே என்று கூறுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு டைட்டிலுக்காக புதுமுக இயக்குநர் ஒருவரை, பிரபல இயக்குநர் மிரட்டிக் கொண்டிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நடிக்கும் ஹரியின் புதிய படத்துக்கு வேங்கை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதையும், இதே பெயரை இன்னொரு இயக்குநரும் தனது படத்துக்கு சூட்டியிருப்பதையும் சில தினங்களுக்கு முன்பே கூறி்யிருந்தோம்.

இந்தப் படத்துக்கு ஏற்கெனவே அருவா என்ற பெயரை சூட்டியிருந்தார் ஹரி. ஆனால் அந்தப் பெயர் நாயகன் தனுஷுக்குப் பிடிக்கவில்லையாம். எனவே வேங்கையை எப்பாடுபட்டாவது வாங்கியே தீருவது என்ற முனைப்பில், வேங்கை தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கும் பாலா என்ற புதிய இயக்குநரிடம் பேசியுள்ளார் ஹரி.

ஆனால் அவரோ தலைப்பைத் தரமுடியாது என மகா உறுதியாக இருக்கிறாராம்.

ஹரியோ, வேங்கைதான் வேண்டும் என்ற வேகத்தில், புதிய இயக்குநரை மிரட்ட ஆரம்பித்துள்ளாராம். மரியாதையா தலைப்பைக் குடுத்துரு… என்னைப் பத்தி உனக்குத் தெரியாது” என்று தன் படத்தின் அருவா ஹீரோக்கள் கணக்காக மிரட்ட ஆரம்பித்துள்ளாராம்.

இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடும் முடிவில் இருக்கிறாராம் புதிய இயக்குநர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum