தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று ஐந்து படங்கள்

Go down

இன்று ஐந்து படங்கள் Empty இன்று ஐந்து படங்கள்

Post  ishwarya Tue Apr 23, 2013 11:49 am

இன்று மட்டும் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சித்து பிளஸ் டூ, விருதகி‌ரி படங்களுக்கு மட்டுமே ஓரளவு எதிர்பார்ப்பு உள்ளது.

சித்து பிளஸ் டூ படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்க சாந்தினி என்பவர் அவரது ஜோடியாக நடித்துள்ளார். கே.பாக்யரா‌ஜ் இயக்கம். காதல், காமெடி என படம் உருவாகியுள்ளது.

விஜயகாந்த் முதல் முறையாக இயக்கி நடித்திருக்கும் போலீஸ் ஸ்டோ‌ரி விருதகி‌ரி. அரசியல் எதி‌ரிகளுக்கு எதிரான டயலாக், கால் சுழற்றி அடிக்கும் ஃபைட் என அதே வழக்கமான மசாலா. தொடர் தோல்விகளால் துவண்டு போன தங்கள் கேப்டனை எப்படியாவது வெற்றி பெற வைக்க தொண்டரடிகள் செய்யும் பிரயத்தனம்தான் படத்தின் ஒரே பலம்.

ஷாம் நடிப்பில் உருவாகியிருக்கும் அகம் புறமும் இன்றுதான் வெளியாகியுள்ளது. மீனாட்சி ஜோடி. திருமலை படத்தை இயக்கியுள்ளார். இவை தவிர ஹெச்டி-எஸ்எல்ஆர் கேமராவில் படமாக்கப்பட்ட சனிக்கிழமை சாயந்திரம் ஐந்து மணி படமும் இன்று வெளியாகியுள்ளது.

ஆதி, மீரா நந்தன் நடித்திரு‌க்கு‌ம் அய்யனார் படமும் இன்று திரைக்கு வருகிறது. ஆ‌க்சன் படமான இது ரசிகர்களை கவர அதிக வாய்ப்புள்ளது.

சமீபத்தில் எந்தப் படமும் – மைனா நீங்கலாக – ஓடாத நிலையில் இன்று வெளியாகும் படங்களாவது கோடம்பாக்கத்துக்கு குளுக்கோஸ் தருமா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum