தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராக்கெட் ராஜா என்ற பெயருக்கு எதிர்ப்பு – கார்த்தி வீடு முன்பு நாடார்கள் மறியல்

Go down

ராக்கெட் ராஜா என்ற பெயருக்கு எதிர்ப்பு – கார்த்தி வீடு முன்பு நாடார்கள் மறியல் Empty ராக்கெட் ராஜா என்ற பெயருக்கு எதிர்ப்பு – கார்த்தி வீடு முன்பு நாடார்கள் மறியல்

Post  ishwarya Sat Apr 20, 2013 4:50 pm

சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கார்த்தி வீடு முன்பு, நாடார் மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சிறுத்தை. இப்படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரில் அவர் நடித்துள்ளாராம். நாடார் மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவர் பெயர் ராக்கெட் ராஜா. இதையடுத்து சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பெயரை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், இதை வலியுறுத்தி கார்த்தி வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து பாண்டி பஜாரில் உள்ள நடிகர் சிவக்குமார் வீட்டில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் இன்று காலை தடையை மீறி நாடார் மக்கள் கட்சியினர் குவிந்து விட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெயரை மாற்ற மாட்டோம்-சிறுத்தை தயாரிப்பாளர்

இதற்கிடையே ராக்கெட் ராஜாஎன்ற பெயரை மாற்ற முடியாது என்று சிறுத்தை படத் தயாரிப்பாளரும், நடிகர் கார்த்தியின் உறவினருமான ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், படம் வெளிவருவதற்கு முன்பே அந்த கேரக்டர் பெயரை மாற்றக்கோருவது சரியல்ல. படம் பார்க்கும் போது உண்மை நிலை தெரியவரும். அப்போது எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘அம்புலி’ படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
» இலங்கையில் கச்சேரி நடத்த எதிர்ப்பு: பாடகர் மாணிக்க விநாயகம் வீடு முற்றுகை
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,
» பப்பி லஹரி பாடிய 'நாட்டி ராஜா ராஜா..'
» ஸ்ரேயாவின் ராஜா போக்கிரி ராஜா 27ம்தேதி ரீலிஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum