பெண்கள் பாதுகாப்பு சட்டம்
Page 1 of 1
பெண்கள் பாதுகாப்பு சட்டம்
பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான்.
பெரும் பாலான துறைகள் ஆண்களால் நடத்தப்படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் ஆணாதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே உள்ளனர். நகர்புறங்களில் பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்னும் கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர். இவ்வாறு பாதுகாப்பின்றி வாழ்க்கையைத் தொடரும் பெண்களின் வாழ்வில் பாதுகாப்பு கிடைக்குமா? என்று எத்தனையோ பெண்களும், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவர்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடு களையும் களைந்து, சமத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது.
பிரிவு 21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவு படுத்துகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பதோ பெண்களின் பாதுகாப்பற்ற நிலை. இந்நிலை இந்தியாவில் மிகவும் உயர்ந்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தியது.
1993-லிருந்து இந்திய அரசானது பல நிலைகளில் பெண்கள் பாதுகாப்பிற்கு முயற்சிகளை எடுத்த வண்ணமாக இருக்கின்றது. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் "பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''.
இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் யுத்தம்
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum