தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய தண்டனைச்சட்டம் பெண்களுக்கு தரும் பாதுகாப்பு

Go down

இந்திய தண்டனைச்சட்டம் பெண்களுக்கு தரும் பாதுகாப்பு Empty இந்திய தண்டனைச்சட்டம் பெண்களுக்கு தரும் பாதுகாப்பு

Post  meenu Mon Jan 21, 2013 2:18 pm

இந்திய தண்டனைச்சட்டம், பெண்களின் உரிமையையும், தனித்தன்மையையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் சில பிரிவுகளில் சில தண்டனைகளை வரையறுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- சட்டப்பிரிவு குற்றம் தண்டனை

* 304 பி (1) வரதட்சணை இறப்பு: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை. ஆனால் ஆயுட்காலச்சிறை தண்டனையும் விதிக்கலாம். 313 (2) 314, 315

* சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதமின்றிச் செய்யப்பட்ட கருச்சிதைவு அவ்வாறு கருச்சிதைவின் போது பெண் இறந்துவிட்டால்: 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம், ஆயுள் தண்டனையும் விதிக்கலாம்

* 354 (3) மானபங்கம் செய்தல்- வன்முறை: 2 ஆண்டுச்சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்

* 361 (4) 18 வயதுக்குட்பட்ட பெண்ணைக் கடத்தல்: 7 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்

* 366 (3) 366 அ திருமணத்திற்கோ அல்லது தகாத உடலுறவுக்கோ கட்டாயப்படுத்தி வசியப்படுத்தும் நோக்கில் கடத்துதல்: 10 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்

* 376 (6) கற்பழித்தல்: 7 ஆண்டுக்கு குறையாத சிறை, அதிகபட்சம் 10 ஆண்டு அல்லது ஆயுட்காலச்சிறை மற்றும் அபராதம்

* 493 (7) கணவன் என்று ஏமாற்றிப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல்: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்

* 494 (Cool மனைவி உயிருடன் இருக்கும் போது மீண்டும் வேறு திருமணம் செய்தல்: 7 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்

* 495 (9) ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து மறுமுறை திருமணம் செய்தல்: 10 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்

* 498 (10) திருமணமான ஒரு பெண்ணைப் பசப்பிக் கடத்தி சென்று தகாத உடலுறவுக்கு வற்புறுத்தல்: 2 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்

* 509 (1) பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கில் பேசுதல், ஒலி எழுப்புதல், சைகை காட்டிப் பெண்ணின் அந்தரங்கத்தில் தகாத முறையில் தலையிடுதல்: 1 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum