பெண் சுதந்திரம்
Page 1 of 1
பெண் சுதந்திரம்
ஆனால் பெண்களின் மீதான அதிகாரத்துவத்திற்கும் அடிமைத்துவத்திற்கும் இவை எல்லாவற்றிலும் இடம் இருந்திருக்கிறது. வரலாறு முழுவதுமே பெண்களின் மீதான அடக்குமுறையைப் பாதுகாக்கின்ற மரபு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்துவந்திருக்கிறது.
பெண்களின் மீதான அனைத்துவித உரிமை மறுப்புகளும், அடக்குமுறைகளும், பாரபட்சங்களும் சமய, கலாசார, பண்பாட்டின் பேரால் நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.பெண்களின் மீதான பிரச்சினைகளை தனித்து அடையாளம் கண்டு அதற்கான கருத்துருவாக்கம் கண்டடையப்பட்டது சமீப நூற்றாண்டுகளில் தான்.
சுமூகமான, ஆரோக்கியமான, பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு பெண்கள் சகல மட்டங்களிலும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பழம்பெரும் வழக்காறுகளை உடைத்துதெறிந்து பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே முன்னின்று வெளியில் வந்து போராட வேண்டும்.
பெண்களின் உரிமை மறுப்புக்கள் காலம் காலமாகத் தொடாந்தவண்ணமேயுள்ளது. பெண்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாகச் சொல்வதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் உரித்துடையவர்கள். தமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாடான கல்வியை வடிவமைப்பதற்கும் தகுதியுடையவர்கள்.
பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், சொத்துரிமை மற்றும் தமக்கு விருப்பமான தொழிற்துறையைத் தெரிவு செய்வதற்கும் உரிமையுடையவர்கள். பெண்களே சுயமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும், தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் முன்வரவேண்டும்.
பெண்கள் உடல், உள ரீதியாக வலுப்பெறுவதோடு ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதற்கூடாகவே ஆண்களோடு சமஅளவில் பங்குபற்ற முடியும். சமூக மேம்பாட்டு உருவாக்கத்தில் பெண்களும் ஆண்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சுதந்திரமான பெண் விடுதலையையும், ஆரோக்கியமான சமூக விடுதலையையும் வென்றெடுக்க முடியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் சுதந்திரம்
» சும்மாவா கிடைத்தது சுதந்திரம்
» Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற
» இலங்கையில் மட்டுமே பூரண மத சுதந்திரம்
» இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum