குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
Page 1 of 1

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 அமலுக்கு வந்து விட்டது. குடும்ப பெண்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இருக்காது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 அமலுக்கு வந்தவுடன் குடும்ப பெண்களின் வாழ்வில் ஓளி வந்து விட்டது என்பது எல்லாம் ஓர் வளமையான கற்பனை. கணவனை சிறைக்கு அனுப்பி விட்டு தான் மட்டும் நிம்மதியாக இருக்க எந்த நடுத்தர, கீழ்தர, ஏழை பெண்களும் விரும்பவே மாட்டார்கள்.
குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம், வரதட்சனை தடுப்பு சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், ஈவ் டிசிங் தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் இருந்தாலும் அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. குழந்தை தொழிலாளர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
வரதட்சனை வாங்கப்பட்டு, கொடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன, குழந்தை திருமணங்கள் வட மாநிலங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குடும்ப பெண்களை பாதுகாக்க இதற்கு முன்பும் சட்டத்தில் வழி வகைகள் இருந்தன.
இந்த சட்டத்தில் மனைவியை அடிக்கும் கணவனுக்கு 20 ஆயிரம் அபதாரம், ஓராண்டு சிறை என்று இருக்கிறது. இந்த தண்டனையை கணவன் பெற வேண்டும் என்றால் மனைவி புகார் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் பெண்கள் தங்களது கணவனுக்கு எதிராக புகார் கொடுக்கவே பெரும்பாலும் வர மறுக்கிறார்கள்.
மேல் தட்டு வர்க்க மக்கள் வேண்டுமானால் வரலாம், ஆனால் நடுத்தர, கீழ்த்தர, வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் பிரிவு பெண்கள் தங்களது கணவனுக்கு எதிராக புகார் கொடுக்க வரவே மாட்டார்கள். ஏன் என்றால் இத்தகைய குடும்பங்களில் கணவன் மூலமாகத் தான் வருமானமே வருகிறது. நடுத்தர குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பார்கள்.
இதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்களில் கணவனின் சம்பளம் வீட்டிற்கு வராது. அந்தப் பணம் மதுக் கடை, பீடி, சிகரெட் என்று போய் விடும். அந்தக் குடும்பத்தை மனைவி தான் வழி நடத்திச் செல்வார். அப்படி பட்ட பெண்களை கணவன்கள் அடிக்கும் பொழுது அப்பெண் காவல் நிலையத்திற்கு எப்படி புகார் கொடுக்க செல்வார்?
அப்படியே ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும், ஆண்களின் அதிகாரம் நிறைந்த காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுகின்றனர். அதிகமான முற்றின புகார்களைத் தான் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum