தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சின்னத் திரை… தேவயானி, சுகன்யாவுக்கு தமிழக அரசு விருது!

Go down

சின்னத் திரை… தேவயானி, சுகன்யாவுக்கு தமிழக அரசு விருது! Empty சின்னத் திரை… தேவயானி, சுகன்யாவுக்கு தமிழக அரசு விருது!

Post  ishwarya Sat Apr 20, 2013 2:25 pm

சிறந்த சின்னத்திரை நாயகிகளாக தேவயானி, சுகன்யா ஆகியோர் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2007 மற்றும் 2008ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் குறிப்பு:

தமிழக அரசு வழங்கும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு. மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி. சங்கர், நடிகர் ராஜசேகர், தமிழ்வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

இத்தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு 2007ஆம் ஆண்டுக்கான 7 விண்ணப்பங்களும், 2008 ஆம் ஆண்டுக்கான 12 விண்ணப்பங்களும் ஆக வரப்பெற்ற மொத்தம் 19 சின்னத்திரைத் தொடர்களைக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரைகளின்படி முதல்வர் கருணாநிதி விருதுக்குரிய தொடர்கள், மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.

அதன் விவரம்:

2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:

சிறந்த நெடுந்தொடர்

1. சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு : கோலங்கள் (விகடன் டெலிவிஸ்டாஸ்)
ரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு : லட்சுமி (ஹோம் மூவி மேக்கர்ஸ்)
ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

சிறந்த சாதனையாளர் விருது

1. 2007ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் – ராதிகா
ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

2. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – வி.எஸ். ராகவன்
ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருது

1. சிறந்த கதாநாயகன் -விஜய் ஆதிராஜ் (லட்சுமி)

2. சிறந்த கதாநாயகி – தேவயானி (கோலங்கள்)

3. சிறந்த குணச்சித்திர நடிகர் – பிருத்விராஜ் (அரசி)

4. சிறந்த குணச்சித்திர நடிகை – சத்யபிரியா (கோலங்கள்)

5. சிறந்த வில்லன் நடிகர் – ராஜ்காந்த் (மேகலா)

6. சிறந்த வில்லி நடிகை – நளினி (பந்தம்)

7. சிறந்த குழந்தை நட்சத்திரம் – நிவேதா (அரசி)

8. சிறந்த இயக்குநர் – சுந்தர் கே. விஜயன் (லட்சுமி)

9. சிறந்த கதையாசிரியர் – அறிவானந்தம் (அகமும் புறமும்)

10. சிறந்த திரைக்கதை ஆசிரியர் – முத்துசெல்வம் (மேகலா)

11. சிறந்த உரையாடல் ஆசிரியர் – பாஸ்கர் சக்தி (மேகலா)

12. சிறந்த ஒளிப்பதிவாளர் – வசீகரன் (அரசி)

13. சிறந்த படத் தொகுப்பாளர் – ரமேஷ் (அரசி)

14. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ரேகான் (பந்தம்)

15. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – மதி (லட்சுமி)

16. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) – நித்யா (பாசம்)

2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த நெடுந்தொடர்

1. சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு – ஆனந்தம் (சத்யஜோதி பிலிம்ஸ்)
ரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு நம்ம குடும்பம் (எவர் ஸ்மைல் எண்டர்பிரைசஸ்)
ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

சிறந்த சாதனையாளர் விருது

1. 2008ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் – வ.கௌதமன்
ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

2. 2008ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – ஒய்.ஜி.மகேந்திரா
ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருது

1. சிறந்த கதாநாயகன் – சஞ்சீவ் (திருமதி செல்வம்)

2. சிறந்த கதாநாயகி – சுகன்யா (ஆனந்தம்)

3. சிறந்த குணச்சித்திர நடிகர் – மோகன் வி.ராமன் (வைர நெஞ்சம்)

4 . சிறந்த குணச்சித்திர நடிகை – அனுராதா கிருஷ்ணமூர்த்தி (அரசி)

5. சிறந்த வில்லன் நடிகர் – சாக்ஷி சிவா (நம்ம குடும்பம்)

6. சிறந்த வில்லி நடிகை – மாளவிகா (அரசி)

7. சிறந்த குழந்தை நட்சத்திரம் – மோனிகா (ஆனந்தம்)

8. சிறந்த இயக்குநர் -செய்யாறு ரவி (ஆனந்தம்)

9. சிறந்த கதையாசிரியர் – குமரன் (திருமதி செல்வம்)

10. சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ் (திருமதி செல்வம்)

11. சிறந்த உரையாடல் ஆசிரியர் – லியாகத் அலிகான் (அரசி)

12. சிறந்த ஒளிப்பதிவாளர் – அசோக்ராஜன் (சிவசக்தி)

13. சிறந்த படத் தொகுப்பாளர் – ராஜீ (மேகலா)

14. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – ஆதித்யன் (சந்தனக்காடு)

15. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – சங்கர் (பந்தம்)

16. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) – அனுராதா (தவம்)

விருது பெறும் சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

-இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» மோசடி…சின்னத் திரை விருதை திருப்பிக் கொடுத்த ராதிகா!
» விஜய் தந்தை பட யூனிட்டுக்கு தமிழக அரசு ‘ஃபைன்’!
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum