பெண்களை மயக்கும் மாடலிங் மோகம்
Page 1 of 1
பெண்களை மயக்கும் மாடலிங் மோகம்
இன்றைய இளம்பெண்கள் பலரின் கனவுகளும் வித்தியாசமானவை. சாதிக்கிற துறையில் இருக்கும் பெண்களும் கூட இப்போது மீடியா வெளிச்சப் புகழை விரும்பத் தொடங்கி இருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக புகழுக்கு முன் வருமானம் இரண்டாம்பட்சம் என்கிற அளவுக்கு தங்களை மாற்றிக்கொண்டு விட்ட பெண்களும் இப்போது அதிகரித்து வருகிறார்கள்.
இப்படி வரத்தொடங்கியிருக்கும் பெண்களின் முதல்கனவு என்ற இடத்தில் மாடலிங் இருக்கிறது. இதன்மூலம் கலைத்துறைக்கு அறிமுகம், பிறகு அதிலேயே பிரபலம் என்கிற அளவுக்கு தங்களை மாடலிங் துறை கொண்டு போகும் என்று மனதார நம்புகிறார்கள். வட இந்தியாவில் தான் அழகான இளம்பெண்கள் இப்படி மாடலிங் துறையில் ஆரம்பத்தில் கால் பதித்தார்கள்.
அதில் கிடைத்த வருமானம், அளவு கடந்த புகழ், அதைத் தொடர்ந்து தேடிவந்து மடியில் விழுந்த கலை வாய்ப்புகள் இதெல்லாம் சினிமாவுக்கான திறவுகோலாகவே மாடலிங் துறையை உணர வைத்தன. சினிமா தேடிப்பிடித்து வந்து அழைத்துப்போவது என்பது சிலருக்குத்தான் நடக்கும்.
அதேநேரம் சினிமா தான் லட்சியம் என்ற எண்ணத்தை மனதில் விதைத்துக் கொண்டு அனுதிளமும் அதற்காக காய் நகர்த்துகிறவர்கள் மாடலிங் பக்கம் தங்கள் பார்வையை பதிக்கிறார்கள். முறையான மாடலிங் கோஆர்டினேட்டர்கள் மூலம் முயற்சிக்கும்போது வாய்ப்பு நல்குகிறது. இதில் அவர்கள் எத்தனை தூரம் பிரபலமாகிறார்களோ, அத்தனை சீக்கிரத்தில் கலை வாய்ப்புகள் வரத் தொடங்குகின்றன.
இப்போது மாடலிங் உலகில் வளைய வருகிற பலரையும் கேட்டுப் பார்த்தால் கலைத்துறைக்கான விசிட்டிங் கார்டாகவே பலரும் மாடலிங்கை பயன்படுத்திக் கொள்ளும் உண்மை பளிச்சிடுகிறது. இப்படி உள்ளூர கலைக் கனவு இருந்தாலும் பலர் தங்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
நுனி நாக்கு ஆங்கிலம் கைகொடுக்க, பட்டபடிப்பை முடித்ததும் சுலபத்தில் மாடலிங் துறைக்குள் வந்து விடுகிறார்கள். புகழ் வெளிச்சம் என்பது கொஞ்ச காலம் மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதற்குப் பிறகு ஏதாவது ஒரு துறையில் நிலைக்க வேண்டுமானால் கற்ற கல்வி பயன்படுகிறது.
படிப்புக்கேற்ற துறையில் ஒரு வேலையை பெற்றுக்கொண்டு எதிர்காலத்தை பயமின்றி அமைத்துக் கொள்கிறார்கள். அதேநேரம் அழகையும் இளமையையும் மட்டுமே நம்பி இந்தத் துறையில் கால் வைப்பவர்கள் முகம் முதிரத் தொடங்கும்போது தடுமாறுகிறார்கள். அப்போது ஏற்படுகிற எதிர்கால பயம் அதுவரை அவர்கள் வாழ்ந்த பகட்டு வாழ்க்கையை அர்த்தமில்லாததாக்கி விடுகிறது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை அதிகமாக தாக்கும் மாடலிங் மோகம்
» மாடலிங் ஆகனுமா?
» பெண்களின் ஆடை மோகம்
» மயக்கும் மலேசியா
» கோலிவுட் 2010 – மயக்கும் இசை தந்த டாப் 5 இசையமைப்பாளர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum