தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களின் ஆடை மோகம்

Go down

பெண்களின் ஆடை மோகம் Empty பெண்களின் ஆடை மோகம்

Post  meenu Mon Jan 28, 2013 1:12 pm

ஆடை மீதான பெண்களின் ஆசை, அவர்களுக்கு நினைவு தெரியும் போதிலிருந்தே உருவாகிவிடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போதே வண்ண வண்ண உடைகள் அவைகளின் மனதை பரவசப்படுத்துகிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் வெவ்வேறு உணர்வைத் தூண்டும் சக்தியிருப்பதை சிறு வயதிலே பெண் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன.

ஆடைகளைப் பற்றி வண்ண கனவுகளுடனே அவர்கள் வளர்ந்து வருகிறார்கள். அதனால் பெண்கள் வளர்ந்த பின்பு, அவர்களுக்கு ஆடை மீதான ஆசை, மோகமாக மாறிவிடவும் செய்கிறது. அதனால் தான் அவர்களுக்கு பிடித்த ஆடைகள் எங்கிருந்தாலும், உடனே அவைமீது தன் கவனத்தை செலுத்துகிறார்கள்.

இதர பெண்கள் உடுத்திவரும் உடைகள் பார்க்க அழகாக இருந்தால், அதைத் தொட்டுப் பார்த்து பேசி அது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வார் கள். பெண்களின் இந்த செயலைப் பற்றி ஆண்கள் விமர்சனம் செய்தாலும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார் கள். பெண்களை பரவசப்படுத்த எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

ஆனால் அதிலெல்லாம் விஞ்சி நிற்பது, உடைகள்தான். அவர்கள் விரும்பும் அற்புதமான உடைகளை கொடுத்தால் அவர்கள் அப்படியே பரவசப்பட்டுப் போவார்கள். அழகான ஆடைகள் பெண்களுக்கு புத்துணர்ச்சியளிக்கின்றன. அந்த புத்துணர்ச்சி அவர்களுக்கு புதிய நம்பிக்கைகளை உருவாக்குகிறது. அந்த நம்பிக்கை அவர்களது திறமைகளை மேம்படுத்தி, பெண்களை ஈடுபட்ட துறையில் சாதிக்கச் செய்கிறது.

முற்காலத்தில் மானத்தை காக்கத்தான் ஆடை என்று கூறப்பட் டது. காலப்போக்கில் அதுவே அந்தஸ்துக்குரியதாக மாறியது. இப்போது பொருத்தமான, அழகான உடைகளை பெண்கள் தேர்ந்தெடுத்து அணிவதே சிறப்பு மிகுந்த ஒரு கலையாக கருதப்படுகிறது. ஆடை மீதான பெண்களின் மனப் போக்கை ஆடை நிறுவனங்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன.

பெண்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதத்திலும், தேவைக்கு மேலாக தயாரிப்புகளை பெருக்கி, அவர்களை நிறைய வாங்கவைக்கும் செயலிலும் ஈடுபடுகின்றன. ஆடை ரகங்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், அவைகள் எதிர்பார்க்கும் விலையிலும் கிடைக்கின்றன. அதனால் சாதாரண வருவாய் கொண்ட மக்கள்கூட, தேடிப்பிடித்து வாங்கினால் அற்புதமான உடைகளையும் சொந்தமாக்க முடியும்.

தங்களை இந்த சமூகத்தில் அடையாளப்படுத்திக்கொள்ளவும், பெருமைப்படுத்திக் கொள்ளவும் விரும்பும் பெண்கள், விதவிதமான ஆடைகளை வாங்க ஆசைப்படுகிறார்கள். பாரம்பரிய ஆடைகளாகட்டும், நவீன மார்டன் ஆடைகளாகட்டும் எல்லாமே அவர்களுடைய விருப்பத்திற்குட்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

காலத்திற்கு ஏற்றபடி தங்களை உயர்வாக காட்டிக்கொள்ள விரும்பும் பெண்கள், நவீன ஆடைகளை வாங்கி அணிகிறார்கள். நவீன ஆடைகள் அவர்களின் வேகமான ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கிறது. டூவிலர் ஓட்டவும், உடற்பயிற்சி, யோகாசனம் செய்யவும் நவீன ரக ஆடைகள் உதவுகின்றன. அந்தக் காலத்துப் பெண்கள் போல யாரும் இப்போது வீட்டிலே முடங்கிக்கிடப்பதில்லை.

வெளியே செல்வதால் அவர்கள் நாகரீகத்தை தங்கள் மூலமும் வெளிப்படுத்தவேண்டியதிருக்கிறது. பாரம்பரிய அழகைத் தரக் கூடிய புடவைகள் கூட தற்போது நவீன டிசைன்களோடு வருகிறது. ஒரு புடவை போல மற்றது இருப்பதில்லை. மார்டன் உடையிலிருந்து திடீரென புடவைக்கு மாறுவது சற்று கடினம் தான்.

ஆனால் புடவைகளை பலவிதமாக, எளிதாக கட்டுவதற்கு கற்றுக்கொடுக்கவே இப்போது நிறைய பயிற்சி மையங்கள் உருவாகிவிட்டன. அழகாக புடவை கட்டுவது ஒரு கலை. புடவைகள் இந்தியாவின் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. அதனால்தான் இந்தியாவில் புகழ்பெற்ற பெண்கள் எல்லாம் புடவையில் காட்சியளிக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பெண்கள் ஆடைமோகத்திற்கு கட்டுப்பட்டவர் களாகத் தான் இருக்கிறார்கள்.

அதுதான் பேஷன் ஷோக்களாக வெளிப்படுகிறது. புதிய ஆடைகளை அறிமுகப்படுத்துவதற்கு பேஷன் ஷோக்கள் பயன்படுகின்றன. ஆனால் தைவான் நாட்டிலுள்ள பெண்கள் அழகாக உடையணிவதையே ஒரு விழாவாக கொண்டாடுகிறார்கள். ஜப்பான் நாட்டில் அழகாக ஆடை அணியும் பெண்களை மட்டுமே ஆண்கள் அதிகம் நேசிக்கிறார்கள்.

பெண்கள் அழகாக உடையணியும் விதத்தை வைத்தே ஆண்கள் அவர்களை அங்கீகரிக்கிறார்கள். அழகாக உடையணியத் தெரிந்த பெண்தான் குடும்பத்தை சரியாக நிர்வாகம் செய்வாள் என்பதும் ஜப்பான் ஆண்களின் கருத்து. பெண்களின் அழகுணர்ச்சிக்கு உடை ஆதாரமாக இருக்கிறது. பெண்களின் அழகுணர்ச்சி அவர்களைச் சுற்றி ஒரு ஈர்ப்பு வட்டத்தை உருவாக்குகிறது.

அது அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்து மகிழ்ச்சியாக இயங்க வைக்கிறது. பெண்களுக்கு வயதானால் ஆடைமோகம் குறைந்துவிடுமா? குறையாது, என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வயதுக்கும் ஆடைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அனைத்து வயதுப் பெண்களும் ஆடைகள் மேல் மோகம் கொள்கிறார்கள். எப்போதும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவர்களுடைய எண்ணமே இதற்கு காரணம்.

விதவிதமாக ஆடை அணிவது அவர்களுடைய வாழ்க்கை முறையாகிவிட்டது. பெண்களின் ஆடை மோகத்தால் அல்லல்படும் ஆண்கள் வேண்டுமானால் இதை எதிர்க்கலாம். ஆனால் பெண்களின் ஆடை மோகம் குறைந்துவிட்டால் அவர்களின் வாழ்வின் வேகமும், குறிக்கோளும் குறைந்துவிடும் என்ற கருத்தும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

அதனால் பெண்களின் ஆடை மோகம் அவர்களை வாழத் தூண்டுகிறது என்ற கருத்தும் உருவாகிவிட்டது. பச்சை நிறம் மனதிற்கு தன்னம்பிக்கையையும், எதையும் தாங்கும் மனோபலத்தையும் தருகிறது. அதனால் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை செய்யும் இடங்களில் வெகுவாக பச்சை நிறத்தை தான் பயன்படுத்துவார்கள். வெள்ளை நிறம் ஆன்மாவிற்கு பிடித்த நிறம்.

மனதிற்கு அமைதியை தரும். தெய்வீக குணங்களை உள்ளிருந்து வெளிப்படுத்தும். காக்கி நிறம் சேவை உணர்வை தூண்டும். பெரும்பாலான சீருடைகள் காக்கி நிறத்திலிருப்பது இதனால்தான். மஞ்சள் நிறம் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி கொண்டது. எழுச்சி நிறம் என்றும் சொல்லப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமான இந்த நிறம் அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது.

நீல நிறம், மகிழ்ச்சியின் தூதன். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள். காவி நிறம், மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. சிவப்பு, உக்ரமான நிறம். கருப்பு நிறம் வருத்தம், சோகம், எதிர்ப்பை வெளிப்படுத்தும். இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம், மென்மையான உணர்வைத் தூண்டும். காதல், கருணை என்ற பொருளிலும் அதை எடுத்துக்கொள்ளலாம்.

கரும்பச்சை நிறம், மனோபலம், தைரியத்தைக் கொடுக்கும். இளம்பச்சை, புத்துணர்ச்சி தரும். புதுமையான எண்ணங்களை தோற்றுவிக்கும். இப்படி நிறங்களுக்கு பல குணங்களுண்டு. அதை உடுத்துபவர்களுக்கும் அந்த உணர்வுகள் தோன்றும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum