தூங்கா நகரம் – திரை விமர்சனம்
Page 1 of 1
தூங்கா நகரம் – திரை விமர்சனம்
நட்பின் வலிமை சொல்லும் நான்கு நண்பர்கள் கதை…
மதுரையில் வெவ்வேறு பகுதியில் வேலை பார்க்கும் விமல், பரணி, நிசாந்த், கவுரவ் நால்வரும் மதுக்கடையில் பழக்கமாகின்றனர். தினம் குடி, கொண்டாட்டம் என திரிகிறார்கள். ஜவுளிக்கடையில் உடை மாற்றும் பெண்களை உள்ளூர் தாதா மகனும், அவன் நண்பனும் செல்போனில் படம் பிடித்து அவற்றை அதே பெண்களுக்கு அனுப்பி மிரட்டி பலாத்காரம் செய்கின்றனர்.
திருமணமாகப் போகும் கோவில் அர்ச்சகர் மகள் மொபைலுக்கும் அவளது ஆபாச படம் வருகிறது. அர்ச்சகர் பதறுகிறார். அவர் நிலைமை கண்டு விமல் கலங்குகிறார். தாதா மகனை அடித்து நொறுக்குகிறார். அவன் கண் பார்வை போகிறது.
விமலை தீர்த்து கட்ட தாதா கோஷ்டி தேடி அலைகிறது. அவர் ஊருக்கு ஓடுகிறார். நண்பர்கள் மூவரையும் பிடித்து விமலை கொல்ல தூண்டுகின்றனர்.நட்பா, நண்பன் உயிரா, என தவிக்கின்றனர். அவர்கள் எடுக்கும் முடிவு கிளைமாக்ஸ்…
கதாபாத்திரங்கள் பற்றிய வடிவேலு பின்னணி குரலில் காட்சிகள் விரிகின்றன. நண்பர்கள் மதுக்கடை சண்டையில் சேர்ந்து பரணி அறைக்குள் அடைக்கலமாகும் சீன்கள் ரகளை.
போதையில் உளரும் போதும் உதாசீனம் செய்த நண்பன் விபத்தாகி சாக கிடக்கையில் தூக்கி போய் ஆஸ்பத்திரியில் காப்பாற்றுவதிலும் அழுத்தம் பதிக்கிறார் விமல்.
மூன்று நண்பர்களும் விமல் கல்யாணத்தில் புகுந்து அவரை கொல்ல வியூகம் வகுப்பது எதிர்பாராத உதறல். கிளைமாக்ஸ் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
மயானத்தில் பிணம் எரிப்பவாக வரும் கவுரவ் ஈர்க்கிறார். அவர் மொபைலில் உள்ள சவ ஊர்வல மேள ரிங்டோன் சிரிக்க வைக்கிறது. உள்ளூர் டி.வி. சேனல் தொகுப்பாளினியாக வரும் அஞ்சலி அம்சம். வாய் பேசாதவராக வரும் நிசாந்த் காமெடியும் சீரியசுமாய் வரும் பரணி விளாசுகின்றனர்.
இரு பாட்டிமார்களின் காமெடி வயிற்றை புண்ணாக்கும் ரகம். கொஞ்சமாய் பேசி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் கமலா தியேட்டர் வி.என். சிதம்பரம். மதுரை கதை களத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கவுரவ்.
ஆரம்ப காட்சிகளில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். பிற்பகுதி சீன்களை விறுவிறுப்பாக்கி ஒன்ற வைக்கின்றன. சுந்தர் சி.பாபுவின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. கூரான பார்வைகள் பாடல் மனதை வருடும் மெலடி. கே.விஜய் உலகநாத் ஒளிப்பதிவில் மதுரை அழகு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நகரம் – திரை விமர்சனம்
» விருது, பாராட்டு மழையில் ‘தூங்கா நகரம்’ கௌரவ்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum