சபரிமலை பெயர் வந்த விதம்
Page 1 of 1
சபரிமலை பெயர் வந்த விதம்
சபரி என்பவள் ஒரு வேடர் குல தலைவனின் மகள். இவளுக்கு வேடர் குலத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போது பிராணிகளை வேட்டையாடும் ஒருவரை மணம் முடிக்க மாட்டேன் என்று வெறுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி தபசியாக மாறிவிடுகிறாள். மதங்க முனிவர் ஆசிரமத்தில் பணிவிடை செய்து தவத்தில் ஈடுபடுகிறாள்.
அப்போது அந்த முனிவர் சபரியிடம் என்னிடம் பணி செய்து உன் காலத்தை கடத்தி விட்டாய். ஆனால் நான் தியானித்து வரும் திருமால், ஸ்ரீராமன், சீதாதேவி ஆகியோர் சித்திர கூடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சிலகாலங்களுக்குள் இங்கு வருவார்கள்.
எனக்கு பதிலாக நீ அவர்களை உபசரிக்க வேண்டும் என்று கூறிய முனிவர் அக்கினியை வளர்த்து தன் பூத உடலை அழித்துக் கொள்கிறார். முனிவர் சொன்னது போல சபரியும் அங்கு வரும் ராமர், சீதாதேவி ஆகியோரை உபசரிக்கிறார். அந்த சபரியின் பெயராலேயே இந்த சிறப்பு மிக்க தலம் சபரிமலை ஆயிற்று.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» ஆங்கில மாதங்களுக்கு பெயர் வந்த விதம்
» பெயர் வந்த கதை...
» ஈஸ்வரர் பெயர் வந்த கதை
» பக்தி பல விதம்
» பக்தி பல விதம்
» பெயர் வந்த கதை...
» ஈஸ்வரர் பெயர் வந்த கதை
» பக்தி பல விதம்
» பக்தி பல விதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum