பக்தி பல விதம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பக்தி பல விதம்
பெரியோர்களும், சான்றோர்களும் பக்தி நெறியில் பல வித மார்க்கங்களைப் பின்பற்றி சித்தியடைந்திருக்கிறார்கள்.
சிரவணம் (கேட்டல்): இறைவனுடைய `திருவிளையாடல்'கள் பற்றியும், அவனது குணாதிசயங்கள் பற்றியும் காதால் கேட்டுக் கேட்டு மெய் மறந்து போதல். (இவ்வழியைப் பின்பற்றி முக்தியடைந்தவர்- பரீட்சித் மகாராஜா)
கீர்த்தனம் (பாடுதல்): இறைவனை, நெஞ்சாற வாயாறப் போற்றி பாடுதல் (மீராபாய்)
ஸ்மரணம் (உச்சரித்தல்): சிந்தையில் இறைவனை நிறுத்தி, அவனுடைய திருநாமங்களை சதா உச்சரித்தல் (பிரகலாதன்)
பாத சேவனம் (திருவடிச்சேவை): பகவானின் பாதார விந்தங்களை பிரார்த்தனை செய்து நமஸ்கரித்தல் (ஸ்ரீ லட்சுமி தேவி)
அர்ச்சனா (அர்ச்சித்தல்): பூக்களாலும், இலைகளாலும் திருநாமங்களை சொல்லி இறைவனை அர்ச்சித்தல் (ப்ரீது)
வந்தனம் (வழிபடுதல்): நாள்தோறும் இறைவனை நினைத்து வழிபடுதல் (அக்ரூரர்)
தாஸ்யம் (அடிமை): கடவுளுக்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டு சேவை புரிதல் (அனுமான்)
சக்யம் (சிநேகம்): ஆண்டவனை தன் ஆருயிர்த் தோழனாக நேசிப்பது. (அர்ச்சுனன்)
ஆத்ம நிவேதனம் (உயிர்த்தியாகம்): தன்னையே முழுமையாக அர்ப்பணித்தல் (மகாபலிசக்ரவர்த்தி, கண்ணப்பர்)
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பக்தி பல விதம்
» மனம் இயங்கும் விதம்
» வாழ்க்கையைத் தொடங்கிய விதம்!
» சாப்பிடும் விதம் சரிதானா?
» கட்சிக்காரரைக் காப்பாற்றிய விதம்
» மனம் இயங்கும் விதம்
» வாழ்க்கையைத் தொடங்கிய விதம்!
» சாப்பிடும் விதம் சரிதானா?
» கட்சிக்காரரைக் காப்பாற்றிய விதம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum