ஈஸ்வரர் பெயர் வந்த கதை
Page 1 of 1
ஈஸ்வரர் பெயர் வந்த கதை
சூரியனுக்கு உஷாதேவி(சுவர்க்கலாதேவி) சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும் ஒளியாக மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு ஏற்பட்டது.
சனி பகவானுக்கு சிவன் மீதுதான் பக்தி அதிகமாக இருந்தது. சிவனுக்கு நிகரான நிலையை அடைய வேண்டும் என்று விரும்பிய சனிபகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை நிறுவி கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மனம் இரங்கிய சிவபெருமான்"உனக்கு என்ன வரம் வேண்டும்'' என்று கேட்டார்.
அதற்கு சனி, "எனக்கு என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும். என் பார்வையில் இருந்து யாரும் தப்பக்கூடாது. என் பார்வைபட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட வேண்டும். நவக்கிரகங்களில் எனக்கு மட்டுமே அதிக பலம் வேண்டும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தர வேண்டும்'' என்றார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உனக்கும் ஈஸ்வரன் என்ற பட்டம் தருகிறேன். இன்று முதல் நீ சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவாய் என்றார். இப்படித்தான் சனிக்கு ஈஸ்வர அந்தஸ்து கிடைத்தது
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» பெயர் வந்த கதை...
» சபரிமலை பெயர் வந்த விதம்
» ஆங்கில மாதங்களுக்கு பெயர் வந்த விதம்
» உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
» என் பெயர் ராமசேஷன்
» சபரிமலை பெயர் வந்த விதம்
» ஆங்கில மாதங்களுக்கு பெயர் வந்த விதம்
» உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
» என் பெயர் ராமசேஷன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum