தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மும்பை பெண் டி.வி.நிருபருடன் காதல்: பிருதிவிராஜ் திருமணம்

Go down

மும்பை பெண் டி.வி.நிருபருடன் காதல்: பிருதிவிராஜ் திருமணம் Empty மும்பை பெண் டி.வி.நிருபருடன் காதல்: பிருதிவிராஜ் திருமணம்

Post  ishwarya Fri Apr 19, 2013 6:02 pm

கனாகண்டேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிருதிவிராஜ். “மொழி” படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். பாரி ஜாதகம், சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்திலும் முன்னணி நடிகராக உள்ளார். பிருதிவிராஜுடன் பல நடிகைகளை இணைத்து “கிசு கிசுக்கள்” வந்தன. பிரியாமணியை திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்பட்டது. அதையெல்லாம் மறுத்தார்.

தற்போது மும்பை பெண் டி.வி. நிருபருடன் பிருதிவி ராஜ் காதல் வயப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில சேனலில் பணியாற்றும் அப் பெண் தென்னிந்திய சினிமா பற்றி பிருதிவி ராஜிடம் பேட்டி எடுத்தாராம். அப்போது நிருபரிடம் மனதை பறிகொடுத்தார்.

பிருதிவிராஜ் பெற்றோரும் காதலை ஏற்றுக் கொண்டார்களாம். வாரம் தோறும் காதலியை பார்க்க மும்பை சென்று வருகிறார். ஏப்ரல் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum