தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை இஷாதியோல் திருமணம்: மும்பை கோவிலில் இன்று நடந்தது

Go down

நடிகை இஷாதியோல் திருமணம்: மும்பை கோவிலில் இன்று நடந்தது Empty நடிகை இஷாதியோல் திருமணம்: மும்பை கோவிலில் இன்று நடந்தது

Post  ishwarya Wed Apr 03, 2013 11:45 am

இந்தி நடிகை ஹேமமாலினி திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். தமிழ் பெண்ணான இவர் இந்தி சூப்பர்ஸ்டாரான தர்மேந்திராவுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தார். பின்பு அவரையே திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார்.

ஹேமமாலினி- தர்மேந்திரா ஜோடிக்கு, இஷாதியோல், அகானா என இரு மகள்கள். இஷாதியோல் இந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுடன் நடித்தார். இஷாதியோலுக்கும், மும்பை தொழில் அதிபர் பரத் தக்தானிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பரத் தக்தானிக்கு மும்பையில் சொந்தமாக பல ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இஷாதியோல்- பரத் திருமணம் இன்று காலை 7.30 மணிக்கு மும்பையில் உள்ள கோவிலில் நடந்தது. புரோகிதர்கள் மூலம் தமிழ் கலாச்சாரப்படி இந்த திருமணம் நடந்தது.

இஷா காஞ்சிபுரம் பட்டுச்சேலை உடுத்தி இருந்தார். மணமகன் வடஇந்திய ஆடை உடுத்தி இருந்தார். முகூர்த்த மேடையை சுற்றிலும் தமிழ் திருமணங்களை போல் வாழை மரம் கட்டப்பட்டு இருந்தது. வீட்டின் வாசலிலும் வாழை மரம் கட்டி இருந்தனர். பூக்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

வேதமந்திரங்கள் ஓத இஷா கழுத்ததில் பரத் தாலி கட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். இந்தி நடிகர், நடிகைகள் பலர் நேரில் வாழ்த்தினார்க்ள.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் இன்று நடந்தது
» நடிகர் சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது: காதலியை மணந்தார்
» மும்பையில் இன்று நடந்தது: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் இந்தி டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணந்தார்
» நடிகை கவிதா மகள் கார் டிரைவருடன் ஓட்டம்: கோவிலில் ரகசிய திருமணம்
» நவ்யா – சந்தோஷ் மேனன் திருமணம் நடந்தது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum