சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்
Page 1 of 1
சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்
சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்
அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர்.
ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது காலம், காலமாக நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும். சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாட செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். அறுவடையான புது நெல்லைக் கொண்டு அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழாதான் அன்னதாபிஷேகம்.
அதாவது அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள். அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும் சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணி அளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம்.
எனவே பாண லிங்கத்தின் மேல்பட்ட அன்னம் பிரசாதத்தில் தவிர்க்கப்பட்டு அவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம்.
குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. எனவே அன்னாபிஷேக தினமான நாளை சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» கோவில்களில் இசைக் கருவிகளின் ஒலி கேட்பதின் பலன்
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» கோவில்களில் இசைக் கருவிகளின் ஒலி கேட்பதின் பலன்
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum