முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
Page 1 of 1
முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
முருகன் கோவில்களில் நாளை (10-ந் தேதி) ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சாமி தரிசனத்துக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆடிக் கிருத்திகை விழாவை யொட்டி பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வடபழனி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலையில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண தரிசனம், 50 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் ஒவ்வொரு வகை கட்டணத்துக்கும் தனித் தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு சந்தனகாப்பு, பூ அலங்காரம், ராஜ உடை அலங் காரமும் செய்யப்படுகிறது. இரவு 11 மணி வரை நடை திறந்திருக்கும். சென்னை பூங்காநகர் கந்தகோட்டம் கந்தசாமி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் நவரத்தினம் பதித்த தங்க கவசம் அணிந்து ஸ்ரீமுத்துக்குமரன் எழுந் தருள்வார்.
பின்னர் வாண வேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெறும். குன்றத்தூர் முருகன் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 50 ரூபாய் கட்டணம், 20 ரூபாய் கட்டணம் மற்றும் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முடி காணிக்கைக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி அளவில் மலை அடிவாரத்தில் வள்ளி, தெய்வாணையுடன் முருகன் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணி வரை நடை திறந்திருக்கும். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி நகரத்தார் சார்பில் பால்குட ஊர்வலம் திருமுல்லைவாயலில் இருந்து இன்று புறப்படும். இந்த ஊர்வலம் திருத்தண்டலம் வழியாக சின்னம்பேடு கிராமத்தை இன்று இரவு சென்றடையும்.
இரவில் அங்கு தங்கி நாளை காலையில் நகரத்தார் பால்குடம் எடுத்து சிறுவாபுரி வீதிகளில் ஊர்வலம் வருவார்கள். பின்னர் சாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்படும். சிறப்பு அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு நடை பயணமாக செல்வார்கள்.
அவர்கள் வழியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை அதிகாலை 4 1/2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். இரவு 7 மணிக்கு சாமி ராஜவீதி உலா நடக்கிறது. விழாவையொட்டி சிறப்பு அன்னதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
பொன்னேரி - தச்சூர் கூட்ரோடு அருகே உள்ள ஆண்டார்குப்பம் முருகன் கோவிலில் நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 3 கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் பால்காவடி, புஷ்பகாவடி எடுத்து வருகிறார்கள்.
சாமி தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்போரூர் முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு 10 மணி வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» ஆலங்குடி - திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா
» ஆடி கிருத்திகை விழா தொடங்கியது : திருத்தணி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
» சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்
» ஆடிக் கிருத்திகை
» ஆலங்குடி - திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா
» ஆடி கிருத்திகை விழா தொடங்கியது : திருத்தணி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
» சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்
» ஆடிக் கிருத்திகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum