நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன்; ரசிகர்கள் ஆதரவு எனக்கு குறையவில்லை – தேவயானி
Page 1 of 1

கும்பகோணம் வந்த நடிகை தேவயானி நிருபர்களிடம் கூறியதாவது:
கும்பகோணம் எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று. நான் ஆண்டுக்கு ஒருமுறை கும்பகோணம் வருவேன். ஆனந்தம், கிரி போன்ற சினிமா படங்களின் படப்பிடிப்பு மற்றும் கோலங்கள் டெலிவிஷன் தொடர் ஆகியவற்றுக்கான படப்பிடிப்புகள் இங்கு தான் நடைபெற்றன.
அழகான கோவில்கள், இருபுறமும் ஆறுகள், பசுமையாக தெரியும். கலாசாரமும், தெய்வீகமும், இசையம்சமும் கலந்த ஊர் கும்பகோணம் ஆகும். தற்போது “திருமதி தமிழ்” என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். தற்கால சமுதாய நடப்புகளை வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்ட படம்.
மேலும் பல தமிழ்படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், சரியான கதாபாத்திரங்கள் அமையாததால் நான் தமிழ்ப் படங்களை ஒத்துக்கொள்வதில்லை. தற்போது புதிய படங்களின் தயாரிப்பு மற்றும் கதையம்சங்கள் முற்றிலும் முன்பிருந்ததை விட மாறியுள்ளது. நல்ல கதையம்சங்களுடன் உள்ள படங்கள் வந்தால் நான் நிச்சயம் ஒப்புக் கொள்வேன்.
தற்போது புதிய படங்கள் அதிகமாக வருகின்றன. புதிய இயக்குனர்கள் நிறைய உருவாகிறார்கள். இது திரைப்படத்துறைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வளர்ச்சி என கூறலாம். திரைப்படத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், பல போட்டிகள் இருந்தும் இன்றும் ரசிகர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதால், நான் தமிழ் ரசிகர்களை மறக்க முடியாது.
நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்கு கடமைப்பட்டவள். மேலும் திரைப்படத்துறைக்கு ஏற்றார்போல் சின்னத்திரை மூலமாகவும் ஏராளமான விஷயங்களை நாம் ரசிகர்களிடம் கொண்டு செல்ல முடியும். அதனால் தான் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்துகிறேன். சின்னத்திரையின் மூலம் ஏராளமான ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்: சாந்தினி
» நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்: சினேகா

» 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல “கோ” படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது; சேலத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றி நடிகர் ஜீவா பெருமிதம்
» தமிழில் இனி நிறைய படங்களில் நடிப்பேன்: சமந்தா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum