ரஜினி உடல்நிலை பற்றி திடீர் பரபரப்பு… ரசிகர்கள் பதட்டம்!
Page 1 of 1

தேர்தல் முடிவுகள் மிகப் பரபரப்பாக வந்து கொண்டிருந்த நேரத்தில், ரஜினியின் உடல்நிலையை மையப்படுத்தி அதற்கு இணையான பரபரப்பைக் கிளப்பிவிட்டனர் சிலர்.
ரஜினி மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அந்த வதந்தி.
இதனால் ஏராளமான ரசிகர்கள் பதட்டத்துடன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடுநோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். தொலைபேசியில் விசாரித்த வண்ணமிருந்தனர். பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து கேட்டனர்.
உடனடியாக இதுகுறித்து, ரஜினியின் இல்லத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
“ரஜினி சார் இப்போது பூரண நலத்துடன் வீட்டில் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பழையபடி படப்பிடிப்புக்குச் செல்வார். வதந்திகளை நம்ப வேண்டாம்”, என்றனர்.
ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது கூறுகையில், “ரஜினி சார் நலமுடன் உள்ளார். தேவையின்றி இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி ரசிகர்களை பதட்டத்துக்குள்ளாக்குகின்றனர் சிலர். இந்த விஷமத்தனத்தை நம்ப வேண்டாம்”, என்று கேட்டுக் கொண்டார்.
ஒரே வாரத்தில் ரஜினி இரு முறை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டதாலேயே, இந்த மாதிரி வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரசிகர் திருமணத்துக்கு ரஜினி திடீர் வருகை: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
» அனுஷ்காவுக்கு திடீர் வாந்தி மயக்கம்! ஆந்திராவில் பரபரப்பு
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: ஏமாற்றத்தில் துப்பாக்கி ரசிகர்கள்
» மீண்டும் உடல்நிலை பாதிப்பு – மீண்டும் மருத்துவமனையில் ரஜினி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum