தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: ஏமாற்றத்தில் துப்பாக்கி ரசிகர்கள்

Go down

ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: ஏமாற்றத்தில் துப்பாக்கி ரசிகர்கள் Empty ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: ஏமாற்றத்தில் துப்பாக்கி ரசிகர்கள்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:52 pm

தீபாவளி என்றால் உடனே நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடை, ஸ்வீட்ஸ் மட்டுமல்ல. தற்போது அதனையும் தாண்டி தீபாவளி கொண்டாட்டத்தில் அன்றைய தினத்தில் வரும் புதுப்படங்களும் இடம்பெறுகின்றன. இதனை ஒவ்வொரு ரசிகர்களும் உற்சாக மிகுதியில் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த தீபாவளியை பொறுத்தவரை அனைவரின் எதிர்பார்ப்பும் துப்பாக்கி திரைப்படத்தின் மீது உள்ளது. விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் வெள்ளியன்று இத்திரைப்படம் திரைக்கு வர இருந்தது. இந்நிலையில் துப்பாக்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 9ம் தேதி ரிலீஸாக இருந்த திரைப்படம் தற்போது தீபாவளி தினத்தன்று அதாவது (நவம்பர் 13) ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் துப்பாக்கி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum