தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர் திருமணத்துக்கு ரஜினி திடீர் வருகை: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Go down

ரசிகர் திருமணத்துக்கு ரஜினி திடீர் வருகை: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி Empty ரசிகர் திருமணத்துக்கு ரஜினி திடீர் வருகை: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Post  ishwarya Thu Mar 28, 2013 11:24 am

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளளர் சோளிங்கர் என்.ரவியின் தம்பி முருகன். இவருக்கும் ராஜலட்சுமிக்கும் நேற்று (14ந் தேதி) திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு தாங்கள் வரவேண்டும் என்று அவர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது அழைப்பிதழை பெற்றுக் கொண்ட ரஜினி “மணமக்களை இப்போதே வாழ்த்துறேன் என்னோட பரிசு உங்களுக்கு வந்து சேரும். நான் நேர்ல வந்தா அது அவ்ளோ நல்லா இருக்காது. ஒருத்தர் கல்யாணத்துக்கு போயிட்டு இன்னொருத்தர் கல்யாணத்துக்கு போகாம இருக்க முடியாது. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்” என்று கூறி அனுப்பி இருந்தார்.

ஆனால் ரஜினி ஒருவேளை வர முடிவெடுத்தால் என்ன செய்வது என்று கருதிய ரவி திருமணத்தை ராகவேந்திரா மண்டபத்திலேயே வைத்தார். இந்த செய்தி ரஜினிக்கு சென்றது. அதோடு சோளிங்கர் ரவி மற்றும் முருகன் பற்றிய தகவல்கள் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. இருவருமே ரஜினி மீது தீராத பக்தி கொண்டவர்கள். ரஜினி உடல் நலமில்லாமல் இருந்தபோது சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு முட்டி போட்டே சென்று பிரார்த்தனை செய்தவர்கள். இதில் ரவியின் முழங்கால் முட்டு தேய்மானம் அடைந்து இரண்டு மாதங்கள் மருத்துவமனயில் சிகிச்சை பெற்றார். ரஜினி சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்தபோது முருகன் சிங்கப்பூருக்கே சென்று ரஜினியை பார்க்க முடியாமல் லதா ரஜினியை சந்தித்து அவர் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டே திரும்பினார். இந்த விஷயங்கள் ரஜினி காதுக்கு சென்றது.

நேற்று முன்தினம் (13ந் தேதி) ராகவேந்திரர் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. உறவினர்களும், வேலூர் மாவட்ட ரசிகர்களும் கூடியிருந்தார். சரியாக மாலை 7 மணிக்கு ரஜினி வந்தார். நேராக மனமேடைக்குச் சென்றவர் மணமக்களை வாழ்த்தி பரிசளித்தார். ரஜினி வந்திருப்பதை அறிந்ததும் ரசிகர்கள் முண்டியடித்து மணமேடையை நெருங்கி அவரை பார்த்தார்கள். தலைவா… தலைவா… என்று கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திவிட்டு எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினார் ரஜினி. மணமக்களும், ரவியும் இது கனவா நனவா என்று தங்களை தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த செய்தி இப்போதுதான் கசிந்திருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum