பெண் குழந்தைககள் சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வர தாயின் அறிவுரை
Page 1 of 1

நம்ம வீட்டு பொண்ணுங்க நல்லா படிக்கணும், நல்லா டிரஸ் பண்ணிக்கணும், நல்ல வேலைக்கு போகணும் அப்படின்னு பல விஷயங்களப் பத்தி யோசிக்கிறோம்; அட்வைஸ் பண்றோம். ஆனா, எப்படி நடந்துக்கிட்டா இந்த சமூகத்தில அவங்க பாதுகாப்பா வலம் வர முடியும் அப்படிங்கறத பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுவதில்லை.
அதனாலதான் பல பொண்ணுங்க தங்களோட வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறாங்க. இதுலயும் கொஞ்சம் கவனம் செலுத்தினா நிச்சயமா அவங்க எல்லாத்துலயும் வெற்றி பெறுவாங்க. முன்பெல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு பெண் அவ்வளவு சுலபத்தில் யாருடனும் பேசிவிட முடியாது. ஆனா, இது செல்போன் காலம்.
அதனால தெரிஞ்சவங்க தெரியாதவங்க அப்படின்னு யாருடனும், எப்போது வேண்டுமானாலம் ஈசியா பேச முடியுது. செல்போன் மூலமா, முகம் தெரியாத நபர் கூட உங்க வீட்டுக்குள்ள நுழைய முடியுது. அதனால, முன்பின் தெரியாத நபர்கள் லைனில் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துங்கள்.
அடுத்து, செல்போனை காண்பித்து சில்மிஷத்தில் ஈடுபடுவது; ஆபாசப் படங்களைக் காட்டி பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது என பல வகைகளில் பெண்கள் இன்று சீரழிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
சின்ன பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் என்றோ, இப்ப எதுக்காக இதப்பத்தியெல்லாம் சொல்லித் தரவேண்டும் என்றோ நினைக்காதீர்கள். “டிவி’, சினிமா என உங்கள் பெண் அரைகுறையாக பல விஷயங்களைத் தெரிந்திருக்கிறாள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சக நண்பர்களுடன் பழகவிடுங்கள். குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் தான் உங்கள் குழந்தை சுற்றிவர வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
எல்லையே இல்லாமல் இஷ்டத்துக்கு பிள்ளைகளை விடுவது எத்தனை தவறோ அதே போல தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை வலம்வரச் சொல்வதும். அதனால, உங்கள் குழந்தைகளை சக நண்பர்களிடம் பேச அனுமதியுங்கள். அப்போது தான் அவங்களோட கூச்ச சுபாவம் நீங்கும். மற்றவர்களிடம் உரையாடும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறுங்கள்.
உதாரணமாக, அடுத்திருப்பவர்களிடம் பேசும் போது அவர்களின் கண்களைப் பார்த்து, நேராக நின்று பேசச் சொல்லுங்கள். குறிப்பாக, ஆண்களிடம். அப்படி இல்லாமல், வெட்கப்பட்டு பேசும்போதோ அல்லது நாணிக் கோணி பேசும் போது, ஏதோ ஒரு விதத்தில் எதிர் இருப்பவர் மனதில் பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவார்கள் என்று கூறுங்கள்.
தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்மந்தமான புத்தகங்களை மட்டும் படிச்சா பத்தாது; நாட்டு நடப்புகளையும் தெரிஞ்சுக்கணும். அப்பதான் அதற்கேற்றவாறு இந்த சமூகத்தில் உலா வர முடியும். அதனால, செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள்;
அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். வழிக்காட்டுங்கள். இதுபோன்ற விஷயத்துலயும் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் வீட்டுப் பெண்கள், நிச்சயமாக வாழ்க்கை என்னும் பாதையில் கவனமாக இருப்பார்கள்; வெற்றி பெறுவார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண் குழந்தைகளுக்கு தாயின் அறிவுரை
» தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்
» சமூகத்தில் அக்கறையுடன் செயல்படும் ஸ்ரேயா
» பெண்கள் பாதுகாப்பாக இருக்க சில யோசனைகள்
» பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க சில டிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum