பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க சில டிப்ஸ்
Page 1 of 1
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க சில டிப்ஸ்
தீபாவளி என்றவுடன் பட்டாசுகளும், புத்தாடைகளும், இனிப்புகளும்தான் நம் நினைவுக்கு வரும். இனிமையான தீபாவளியை விபத்தின்றி கொண்டாடினால் கூடுதல் இன்பம்தானே. பட்டாசு வெடிக்கும் போது நம்முடையை பாதுகாப்பு மட்டுமன்றி, அக்கம்பக்கத்தினர் பாதுகாப்பு, சாலையில் வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
மத்தாப்புகள், சங்கு சக்கரங்கள் மற்றும் புஸ்வாணம் உள்ளிட்டவற்றில் ஆபத்து அதிகம் இல்லை. இருந்தபோதிலும், சில சமயங்களில் இவைகள்கூட வெடித்து சிதறும் அபாயமும் உண்டு. வீட்டில் உள்ள பெரியோர் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்துவதுடன் தங்கள் முன்னிலையிலேயே குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
பொதுவாக, அனைத்து வகை பட்டாசுகளையும் இதற்கென கடைகளில் விற்கும் நீண்ட பத்திகளை பயன்படுத்தி வெடிக்க வேண்டும். வீடுகளில் பூஜை அறையில் பயன்படுத்தும் ஊதுபத்திகளை பயன்படுத்தக் கூடாது. பட்டாசுகளை கைகளில் பிடித்து வெடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
வீடுகளின் சமையல் அறைகளில் பட்டாசுகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். ராக்கெட் ரக பட்டாசுகளை, கூரை வீடுகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவை இல்லாத இடங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும். இதய நோயாளிகள், வயதானவர்கள் இருக்கும் இடங்கள், ஆஸ்பத்திரிகள் முன்பு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பட்டாசுகள் வெடிக்கவில்லை என்றால், அதனை கைகளில் எடுத்து ஆராய்ச்சி செய்யக் கூடாது. ஏனெனில் திடீரென அவை வெடித்து நமது கைகளை பதம் பார்க்கும். மேலும் பட்டாசுகள் வெடிக்கும்போது, அருகில் ஒரு பக்கெட்டில் தயாராக தண்ணீர் வைத்திருக்கும் பட்சத்தில் ஆபத்து நேராமல் தவிர்க்கலாம். பட்டாசு கடைகளில் மின் விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்தடை ஏற்பட்டால், மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு ஆகியவற்றை தவிர்த்துவிட்டு, டார்ச் லைட் பயன்படுத்தலாம்.
கடைக்காரர்களுக்கு...
பட்டாசு கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு கருதி, பக்கெட்டுகளில் தண்ணீரை எப்போதும் தயாராக வைத்து கொள்ள வேண்டும். அப்போதுதான் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்களை உடனடியாக தடுக்க முடியும். விற்பனை முடிந்து கடையை மூடிவிட்டு செல்லும்போது, மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். இதுபோன்ற விதிகளை அனைத்து தரப்பினரும் கடைபிடித்தால் தீபத்திருநாளாம் தீபாவளியை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாட்டுப் பட்டாசு
» பெண்கள் பாதுகாப்பாக இருக்க 5 யோசனைகள்!
» பெண்கள் பாதுகாப்பாக இருக்க சில யோசனைகள்
» பெண் குழந்தைககள் சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வர தாயின் அறிவுரை
» பெண்கள் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum