மைதானம் – திரை விமர்சனம்
Page 1 of 1
மைதானம் – திரை விமர்சனம்
முக்கோண காதல் கதை…
கிராமத்தில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சுரேஷ்குரு, ஜோதிராஜ், சிவா, கென்னடி. இவர்கள் பிரிக்க முடியாத நண்பர்களாக வலம் வருகின்றனர். ஜோதிராஜை, சுரேஷ்குரு தங்கை ஸ்வாசிகா விரும்புகிறார். ஜோதிராஜூக்கும் காதல் இருந்தாலும் நண்பன் தங்கை என்பதால் ஒதுங்குகிறார். ஸ்வாசிகாவுக்கும் இன்னொருத்தருக்கும் திருமணம் நிச்சயிக்கின்றனர். அப்போது ஸ்வாசிகா திடீரென மாயமாகிறார். பெற்றோர் அழுது புலம்புகின்றனர்.
நண்பர்கள் நால்வரும் ஊர் ஊராக தேடுகிறார்கள். ஸ்வாசிகாவை கடத்தியது யார்? காதல் ஜோடி சேர்ந்ததா? என்பது கிளைமாக்ஸ்… நட்பையும் காதலையும் உயிரோட்டமாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் எம்.எஸ். சக்திவேல். நண்பன் தங்கையின் காதலை ஏற்கவும் உதறவும் முடியாமல் தவிக்கும் ஜோதிராஜ், யதார்த்தமாய் பளிச்சிடுகிறார். ஸ்வாசிகாவுக்கு திருமணம் நிச்சயமானதும் நொறுங்கி குளக்கரையில் உட்கார்ந்து புலம்பி பரிதாபப்பட வைக்கிறார். ஸ்வாசிகா காதல் உணர்வுகளை கச்சிதமாக வெளிப் படுத்துகிறார்.
நண்பன் உருவில் வில்லனாக வரும் சிவா அதிர வைக்கிறார். ஒருதலை காதலில் ஸ்வாசிகாவை கடத்தி வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு நண்பர்களுடன் சேர்ந்து தேடுவது போல் பாவலா செய்வது கொடூரம்… ஸ்வாசிகா அண்ணனாக வரும் சுரேஷ் குரு நேர்த்தி. தங்கையை காணாமல் பரிதவிப்பதிலும், ஊருக்கு தெரிந்தால் அவமானம் என மறைப்பதிலும் நண்கர்களுடன் சேர்ந்து தேடுவதிலும் அசாத்தியமாய் மனதில் பதிகிறார். கென்னடி கலகலப் பூட்டுகிறார். சபேஷ் முரளி இசையில் பாடல்கள் மனதை வருகின்றனர்.
தந்தை கேரக்டரில் இயக்குனர் அகத்தியன் வலு சேர்க்கிறார். சாதாரணமாக பயணப்படும் கதை போகப்போக திகிலும் சஸ்பென்சுமாய் விறு விறுப்பாகிறது. தேடுதல் படலத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
» நாங்க – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
» நாங்க – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum