தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாகை சூட வா – திரை விமர்சனம்

Go down

வாகை சூட வா – திரை விமர்சனம் Empty வாகை சூட வா – திரை விமர்சனம்

Post  ishwarya Fri Apr 12, 2013 2:34 pm

களவாணி படத்தை இயக்கிய சற்குணத்தின் இரண்டாவது படம் வாகை சூடவா. முதல் படத்தை கமர்ஷியலாக இயக்கியவர் இரண்டாவது படத்தில் குழந்தை தொழிலாளர் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார். அதற்குள் கவித்துவமான காதலையும் சொல்கிறார் இயக்குநர். 1960ல் நடக்கும் சம்பவம்தான் கதை. தனக்குத்தான் அரசு வேலை கிடைக்கவில்லை ஆனால் தனது மகனுக்காகவது அரசு வேலை எப்படியாவது வாங்கித் தந்துவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர் அண்ணாமலை (பாக்யராஜ்). அவர் மகன் வேலுதம்பி (விமல்) பி.யு.சி. டீச்சர் டிரைனிங் முடித்திருக்கிறார்.

கிராம சேவா சங்கம் என்னும் அமைப்பின் மூலமாக கிராமத்தில் ஆறுமாதம் தங்கி படிப்பு சொல்லி தந்தால் அரசு வேலை கிடைக்கும் என்று சொல்லுகிறார் அப்பா. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த கிராமத்திற்கு பயணப்படுகிறான் வேலு. அந்த கிராமத்தில் குழந்தைகளும் பெத்தவங்களும் செங்கல் சூளைகளில் இராத்திரி பகல்னு கூட பார்க்காமல் வேலை செய்கிறார்கள். யாருக்குமே படிப்பறிவு கொஞ்சம் கூட இல்லை. படிப்பு சொல்லி தர வந்திருக்கும் வாத்தியாரான விமலை பார்த்ததும் குழந்தைகள் ஓடி ஒளிகிறார்கள். பெத்தவங்களும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுக்கிறார்கள். அப்புறம், சில சம்பவங்களுக்குப் பிறகு குழந்தைகள் விமல்கிட்ட படிக்கிறதுக்கு வர ஆரம்பிக்கிறாங்க. அப்படி இருக்கும் போது, விமலுக்கு அரசு வேலையில் சேரச் சொல்லி கடிதம் வர தொடர்ந்து அந்த பசங்களுக்கு பாடம் சொல்லித்தந்தாரா? இல்ல அரசு வேலைக்குப் போனாரா என்பது க்ளைமேக்ஸ்.

முதலில் பாராட்டப்பட வேண்டியது ஆர்ட் டைரக்டரைத்தான். பெரிய கிராமத்தையே செட்டாகப் போட்டிருக்கிறார். அந்த கிராமத்து வீடுகள் எல்லாம் அந்த காலத்து ஸ்டைலில் இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்த காலத்தில பயன்படுத்தப்பட்ட ரேடியோ பெட்டி, காப்பி கொட்டை அரைக்கும் மெஷின், கடிகாரங்கள் எல்லாவற்றையும் தேடிப் பிடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த காலத்து லாரி, பஸ் இப்படி படத்தில பயன்படுத்தப்பட்ட பல பொருட்களை நாம இன்றைக்கு மியூசியத்திலதான் பார்க்க முடியும் போல.

டைட்டில் போடும் போது வரும் செங்க சூளைகாரா பாடல் அனிதாவின் குரலில் நம்மை கட்டிப் போட வைக்கிறது. டைட்டில் முடியுறப்போ, செங்கலை ஸ்டைலாகப் போட்டு தலையில் உட்கார வைக்கிற அந்த ஆளுக்கு தியேட்டரில் விழுகிறது செம கிளாப்ஸ். படத்தில் பைத்தியமாக அலையும் ஒருவர்தான் அந்த ஊருக்கு முதலில் வந்தார் என்றும், அவர் கண்டுபிடித்த அந்த மண்ணிலே செங்கல் தயாரிக்க ஆரம்பித்து, கடைசியில் இயற்கை தம்மால் அழிந்து விட்டதாகவே எண்ணி புத்தி பேதலித்துப் போன அந்த மனிதரை திரையில் காட்டும் போதெல்லாம் இயற்கை நம்மை எச்சரிப்பதாகவே தோன்றுகிறது. செங்கல்சூளையில் குழந்தைகள் வேலைபார்ப்பதையும் அவங்க எல்லாம படிக்காமலே இருப்பதையும் மென்மையாகவே சொல்கின்றன காட்சிகள்.

வேலுதம்பி கேரக்டரில் நடித்திருக்கிறார் விமல். அப்பாவி வாத்தியார் இளைஞன் கேரக்டரில் பின்னி பெடலெடுக்கிறார் விமல். அந்த கதாபாத்திரம் அவருக்கு ரொம்பவே பொருந்தியிருக்கிறது. அவர் தலையை படிய வாரிக்கிட்டு சட்டையை இன் பண்ணிக்கிட்டு நடக்கிற விதமே தனி ஸ்டைல். பண்ணையாரின் ஆட்கள் இவரை ஊரைவிட்டு போ என்று சொல்லி போட்டு புரட்டி எடுப்பதும் அதற்கு இவர் மறுக்கும் போதும் உச் கொட்ட வைக்கிறார்.

விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் இனியா. கேரள வரவு. இவலை அலைந்து திரிந்து பிடித்து வந்திருக்கிறார் இயக்குநர். அந்த காலத்து கிராமத்து பெண் கேரக்டரில் கலக்கியிருக்கிறார் இனியா. டீக்கடை வைத்திருக்கும் இவர் விமலிடம் சாப்பாடு தருகிறோம் என்று சொல்லி பணத்தை ஆட்டையைப் போடுவதும் சாப்பாடு சரியாக கொடுக்காமல் அலைக்கழிப்பதும் பின்பு அவரிடம் மனதைப் பறி கொடுத்துவிட்டு விழுந்து விழுந்து கவனிப்பதும் மனதை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுகிற காட்சிகள்.

விமல் அப்பா கேரக்டரில் நடித்திருக்கிறார் பாக்யராஜ். படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள் வரும் இவர், அப்புறம் கடைசியில் க்ளைமேக்ஸ் சமையத்தில் கதையில் எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறார். வெயிட்டான கேரக்டர் என்றாலும் சில காட்சிகளில் வந்து போகிறார் பொன்வண்ணன்.

அந்த சேட்டைக்கார சிறுவர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். திரையில் அவர்கள் வரும் போதெல்லாம் ஏதாவது சின்னப் பிள்ளைத்தனமான விஷயங்களை வேடிக்கையாக செய்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களிடம் மாட்டிக் கொண்டு விமல் தவிப்பதும் சமாளிப்பதும் செம அலப்பறையைக் கொடுக்கின்றன.

சமூகப் பிரச்சனையை கவித்துவமாக சொன்னவிதத்தில் இயக்குநர் சற்குணம் உயர்ந்து நிற்கிறார். பின்னணி இசையில் மட்டுமல்லாது பாடல்களின் இசையிலும் மெய் மறக்கச் செய்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான். செங்கசூளக்காரா, சரசர சாரக்காத்து, போறானே போறானே பாடல்கள் ரொம்பவே வித்தியாசமான அனுபவத்தை கண்களுக்கும் காதுகளுக்கும் தருகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum