ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை-அமிதாப் தந்த அட்வைஸ்
Page 1 of 1

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல், வாந்தி பிரச்சினைக்காக மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் கடந்த மாதம் 29ம் தேதி சேர்ந்தார். அதில் குணம் ஏற்பட்டு வீடு திரும்பிய அவர் மீண்டும் 4ம் தேதி அதே மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல் பரிசோதனையில் ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாததால் காலில் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு 5 தடவைக்கு மேல் ரத்தத்தை சுத்தம் செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க ரஜினி குடும்பத்தினர் விரும்பினர்.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானத்தில் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் ரஜினிக்கு சிகிச்சை அளித்தனர்.
மருத்துவ அறிக்கை வெளியிட அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் என்ன மாதிரி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்ற விவரங்கள் தெரியவில்லை. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுவதாக மருத்துவமனையில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த முடியுமா? என்று டாக்டர் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
அமிதாப் அட்வைஸ்…
உலகின் மற்ற நாடுகளை விட சென்னையிலேயே சிறப்பாக இந்த சிகிச்சையை செய்ய முடியும். ஆனால் இங்கே சொந்தக்காரர்கள், ரத்த உறவுகள்தான் டோனர்களாக இருக்க முடியும் என்பதாலேயே வெளிநாட்டுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறுகின்றனர்.
மேலும் இந்த மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரஜினியை அழைத்துச் செல்லும்படி கூறியவர் அமிதாப் பச்சன்தானாம். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் அமிதாப்பின் நெருங்கிய நண்பருமான அமர்சிங் இங்குதான் மாற்று சிறுநீரகங்கள் பொருத்திக் கொண்டு இப்போது நலமுடன் உள்ளார்.
இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே ரஜினியை சிங்கப்பூரில் அமர்சிங் நலம் பெற்ற இதே மருத்துவமனையில் சேர்க்க லதாவுக்கு அமிதாப் அறிவுரை சொன்னதாக பிரபல ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினிக்கு அரசியல் அட்வைஸ் பண்ண மாட்டேன்: மோகன்பாபு 4
» சிம்ரன் தந்த அட்வைஸ் – சிலிர்க்கும் ஷ்ரத்தா
» ரஜினிக்கு மேலும் இரு தினங்கள் சிகிச்சை! – ஐஸ்வர்யா
» அறுவை சிகிச்சை முடிந்தும் வலி தீரவில்லை-அமிதாப்
» சிங்கப்பூரில் நடந்த மாற்றான் இசை வெளியீட்டு விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum