அறுவை சிகிச்சை முடிந்தும் வலி தீரவில்லை-அமிதாப்
Page 1 of 1
அறுவை சிகிச்சை முடிந்தும் வலி தீரவில்லை-அமிதாப்
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு, மற்றுமொரு அறுவை சிகிச்சை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில், அறுவை சிகிச்சை முடிந்தும் வலி தீரவில்லை. எப்போதையும் விட சற்று அதிகரித்துள்ளதுதான் உண்மை. மேலும் மருத்துவக் குழு இது குறித்து ஆராய்ந்து மற்றொரு அறுவை சிகிச்சை செய்வது குறித்து பரிசீலிக்கின்றனர். சில சமயங்களில் மிகவும் சோர்வாக உணர்கிறேன். எனினும் விரைவில் குணமடைந்து உங்களை (ரசிகர்களை) சந்திப்பேன் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்களன்று மும்பையில் உள்ள செவன்ஹில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அமிதாப், அறுவை சிகிச்சை முடிந்தும் வலி தீராத காரணத்தால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பாமல் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருந்தார். இன்று அல்லது திங்களன்று வீடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum