ரஜினிக்கு அரசியல் அட்வைஸ் பண்ண மாட்டேன்: மோகன்பாபு 4
Page 1 of 1

தெலுங்கு ஆக்ஷன் சூப்பர் ஸ்டாரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பருமான மோகன்பாவுக்கு நேற்று (மார்ச் 19) பிறந்த நாள். வழக்கமாக தன் பிறந்த நாளை இளைஞர்களைப்போல பார்ட்டி வைத்து கொண்டாடும் மோகன்பாபு இந்த முறை தன் பிறந்த நாளை அறவே தவிர்த்து விட்டார். காரணம் சமீபத்தில் அவர் தந்தை மறைந்து விட்டதால். தன் மகள் லட்சுமி பிரசன்னா தயாரித்து நடித்திருக்கும் "மறந்தேன் மன்னித்தேன்" படம் வருகிற 22ந் தேதி தமிழ் நாட்டில் ரிலீசாகிறது. இதற்காக சென்னை வந்திருந்த மோகன்பாபு அளித்த சிறப்பு பேட்டி:
* அப்பாவின் மரணம்...?
முழுமையான வாழ்க்கை வாழ்ந்துட்டுதான் மறைந்தார். என்றாலும் அதனை தாங்கிக் கொள்ள முடியில்லை. வீட்டில் அவர் இடம் காலியாகிவிட்டதே... அதனை யாரால் நிரப்ப முடியும். இன்னும் அந்த சோகத்திலிருந்து வெளியில் வரவில்லை.
* தமிழ்நாட்டை ரொம்ப நேசிக்கிறீங்க போல...?
சென்னையில பேட்டி கொடுக்கிறதால சொல்லவில்லை. நிஜம்மாவே எனக்கு தாய்நாடு தமிழ் நாடுதான். ஒரு மஞ்சள் பையில் இரண்டு செட் டிரஸ்ஸோட திருப்பதியிலேருந்து திருட்டு ரெயிலேறி சென்னைக்கு வந்தவன் நான். பிளாட்பாரத்துல படுத்து, கார்பரேஷன் குழாய் தண்ணி குடிச்சு. வடபழனி முருகன் கோவில் பிரசாதம் சாப்பிட்டு வளர்ந்தவன். சிவாஜிதான் என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தினார். இன்னிக்கு கார், பங்களா, பல கோடிக்கு சொந்தக்காரன். மூணு குழந்தைக்கு அப்பன் இது அத்தனையும் கொடுத்தது தமிழ்நாடுதான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சொல்லுவாங்க. மத்தவங்களுக்கு எப்படியோ என்னைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. ஏர்போட்டுல சென்னை மண்ணுல கால் வைக்கும்போது அம்மா மடியில படுக்குற மாதிரி உணர்வேன். இது மிகையாக சொல்லலீங்க உண்மை.
* தயாரிப்பு, இயக்கம்னு உங்க மகள் லட்சுமி பரபரன்னு இருக்காங்களே?
சின்ன வயசுலேருந்தே அவளை சுதந்திரமா வளர்த்திருக்கேன். ஆண்பிள்ளை மாதிரி வளர்த்திருக்கேன். அவ விருப்பப்பட்ட எதையும் செய்யாம விடமாட்டா... என்னை மாதிரி. என் பிள்ளையாச்சே... தெலுங்குல "கொண்டலோ கோதாவரி"ன்னு தயாரிச்ச பெரிய பட்ஜெட்டா இருக்கே தேவையான்னு கேட்டேன். நீங்க சும்மா இருங்கப்பா நான் ஜெயிச்சு காட்டுறேன்னு சொன்னா. இன்னிக்கு தெலுங்குல பெரிய ஹிட். அவார்டெல்லாம் வாங்கியிருக்கா. என் பொண்ணு என்னை விட நல்லாவே நடிச்சிருக்கா. நானும் 500 படம் வரைக்கும் நடிச்சிருக்கேன். ஒரு அவார்ட்கூட வாங்கினதில்ல.
* திடீர்னு அரசியலுக்கு போனீங்க. போன வேகத்துல திரும்பி வந்துட்டீங்களே?
அரசியல் ஒரு சாக்கடை, நாத்தம் புடிச்சதுன்னு அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது. அதை தாங்க முடியாம திரும்பிட்டேன். அரசியல்ல 90 சதவிகிதம் நல்லவங்க கிடையாது. நிஜமாகவே மக்களுக்கு சேவை செய்யணும்னா அரசியல்ல இருக்க கூடாது. அரசியல் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு துறையா மாறிடுச்சு.
* இப்படி சொல்லித்தான் உங்க நண்பர் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்திட்டீங்களா?
இது என்னோட கருத்து. இதுவே பொதுவான கருத்தா எடுத்துக்க கூடாது. ரஜினி என் நண்பன்தான். குடும்பம், சினிமா பற்றி நிறைய பேசுவவோம். அரசியல் பற்றி அவன் எங்கிட்ட எதுவும் கேட்க மாட்டான். நானும் எந்த அட்வைசும் கொடுத்ததில்லை.
* "கொண்டலோ கோதாவரி" படத்திற்கு ஒரு ஜாதியினர் எதிர்ப்பு தெரிவிச்சாங்களே?
சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது இப்போ பேஷனாப் போச்சு. ஃப்ரீ பப்ளிசிட்டி கிடைக்குதே. சினிமால இப்பா யாரும் ஜாதிய சொல்றதில்ல. அரசியல்தான் ஜாதி இருக்கு. சினிமால ரெண்டே ஜாதிதான். ஒண்ணு ஆர்ட்டிஸ் இன்னொன்னு டெக்னீஷியன்.
* நிறைய கல்வி நிறுவனங்கள் நடத்துறீங்களே பணம் சம்பாதிக்கத்தானே?
யார் சொன்னா...? ஆந்திரா பக்கம் வந்து கேட்டுப்பாருங்க. என்னோட காலேஜ் அத்தனையும் மெரிட் அடிப்படையிலதான் நடக்குது. யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாது. காலேஜ் தொடங்கச் சொல்லி ஐடியா கொடுத்ததே சிவாஜி சார்தான். அவரும், கமலா அம்மாவும்தான் வந்து முதல் பள்ளியை திறந்து வைச்சாங்க. என்னோட கல்வி நிறுவனங்களின் அப்ளிகேஷன் பார்முல ஜாதிங்ற காலமே இருக்காது. நிறைய ஏழை மாணவர்களுக்கு ஃப்ரீ எஜுக்கேஷன் கொடுக்குறேன். இப்படி நிறைய பண்ணிக்கிட்டிருக்கேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை-அமிதாப் தந்த அட்வைஸ்
» ஜெகனுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம்- சொல்கிறார் ‘தாய்மாமன்’ மோகன்பாபு
» அரசியல்…. விஜய்க்கு அஜீத்தின் அட்வைஸ்!
» கருணாநிதியை நெருங்கவும் மாட்டேன், விலகி நிற்கவும் மாட்டேன்! – ரஜினி
» தப்சி டிமிக்கி… மோகன்பாபு ‘கடுகடு’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum