சென்னையில் சூரசம்ஹாரம்
Page 1 of 1
சென்னையில் சூரசம்ஹாரம்
முருகன் அருளாட்சி செய்யும் எல்லா தலங்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இலங்கை, அமெரிக்கா, கனடா, லண்டன், சிங்கப்பூர் உள்பட தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சூரசம்ஹாரம் பக்தி சிரத்தையுடன் நடத்தப்படுகிறது. தமிழர்களின் மனதில் முருகக் கடவுள் எந்த அளவுக்கு ஆழமாக வீற்றிருக்கிறார் என்பது இவை உதாரணங்களாகும்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து பயன் பெறுகிறார்கள். சென்னையில் வடபழனி, கந்தகோட்டம் ஆகிய இரண்டு தலங்களிலும் சஷ்டி விழா கோலகலமாக நடைபெறும். வடபழனி கோவிலில் சஷ்டி விழா 27-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 27,28,29,30,31-ந் தேதிகளில் லட்சார்ச்சனை நடை பெறும். நவம்பர் 1-ந் தேதி லட்சார்ச்சனை நிறைவு பெறும்.
அன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு வடபழனி கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மறுநாள் (2-ந் தேதி) இரவு திருக்கல்யாணம் நடைபெறும். 6-ந் தேதி உற்சவம் முடியும். வடபழனி கோவில் சூரசம்ஹாரம் தொடர்பான மேலும் தகவல்களை 24836903 என்ற எண்ணில் பெறலாம்.
சூரசம்ஹாரம் மிகச் சிறப்பாக நடைபெறும் மற்றொரு தலமான கந்த கோட்டத்தில் 26-ந் தேதி (புதன்கிழமை) சஷ்டி விரதம் தொடங்குகிறது. அன்று தொடங்கும் லட்சார்ச்சனை 31-ந் தேதி வரை நடைபெறும். அன்றிரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடத்தப்படும். மறுநாள் (1-ந் தேதி) திருக்கல்யாணம் நடைபெறும்.
கந்தகோட்டத்தில் சூரசம்ஹாரத்தையொட்டி நடக்கும் நிகழ்வுகளை பக்தர்கள் 25352192 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். சென்னை தவிர சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி சிறப்பாக நடந்து வருகிறது. திருப்போரூர் ஸ்தலத்தில் சூரசம்ஹாரம் பாரம்பரிய சிறப்புடன் நடக்கிறது.
சிறுவாபுரி, ஆண்டார்குப்பம், குன்றத்தூர், வல்லக்கோட்டை, ஸ்தலங்களிலும் சூரசம்ஹார தினத்தன்று கோலாகலமாக இருக்கும். இந்த ஸ்தலங்களில் ஏதாவது ஒரு ஸ்தலத்துக்கு சென்று முருகனிடம் உங்கள் மனதை ஒப்படையுங்கள். உங்கள் மனக்குறைகளை எல்லாம் கந்தன் கலைந்து விடுவான். திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் கொண்டாடப்படுவது இல்லை. அங்கு போருக்கு பிறகு அனுமதி நிலவுவதாக ஐதீகம் உள்ளதால் சூரசம்ஹாரம் நடத்தப்படுவதில்லை.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சென்னையில் சூரசம்ஹாரம்
» சென்னையில் சூரசம்ஹாரம்
» கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
» சூரசம்ஹாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum