கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
Page 1 of 1

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கியது. அன்றுமுதல் தினமும் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், பூஜைகள், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை(3-ந்தேதி) நடக்கிறது. இதனையொட்டி கோவில்நடை நாளை அதிகாலை ஒருமணிக்கு திறக்கப்படுகிறது. பின்பு 1.30மணிக்கு விஸ்வரூப தரிசனமும், பூஜைகளும் நடைபெறுகிறது. மாலை 4.35மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது.
சூரசம்ஹாரத்தை பக்தர்கள் பார்ப்பதற்காக நாழிக்கிணறு பஸ்நிலையம், கலையரங்கம் ஆகிய இடங்களில் பெரிய எல்.இ.டி. டி.வி.க்கள் வைக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சிறப்பு பஸ்கள் நாளை இயக்கப்படுகின்றன. மேலும் நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் சூரசம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பாக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள்.
இதனால் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. கோவில் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி விழா
» திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?
» கந்த சஷ்டி விரதம்
» கந்த சஷ்டி விழா
» திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?
» கந்த சஷ்டி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum