தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post  ishwarya Wed Apr 17, 2013 6:00 pm

அவன் இவன் படம் நாளை (17ம்தேதி) ரீலிஸ் ஆகவிருக்கும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம். வித்தியாசமான கதை மற்றும் கதாப்பாத்திரங்களுடன் படம் இயக்குவதில் வல்லவரான டைரக்டர் பாலா, சேது, நான் கடவுள் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இயக்கியிருக்கும் புதிய படம் அவன் இவன்.

ஆர்யா, விஷால், ஆர்.கே., நடித்திருக்கும் இப்படத்திலும் வழக்கமான பாலா டச் எக்கச்சக்கமாய் இருக்கிறது. முந்தைய படமான நான் கடவுள் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை. அகோரிகளின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியிருந்த நான் கடவுள் படத்திற்கு போதுமான பப்ளிசிட்டி செய்யாததால் குறைவான நாட்களே ஓடியது.

அதனால்தானோ என்னவோ… அவன் இவனுக்கு கடந்த ஒரு வாரகாலமாகவே பத்திரிகை, தொலைக்காட்சிகளில் நிறைய பப்ளிசிட்டி கொடுத்து வருகிறார்கள். விதவிதமான டிரைலர்கள் ஒளிபரப்பாவதால் எதிர்பார்த்ததுபோலவே அவன் இவனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது டிக்கெட் புக்கிங் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சென்னையில் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த முதல் 2 மணி நேரத்தில் அடுத்த 3 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம்.

நான் கடவுளுக்கு முற்றிலும் மாறாக, அவன் இவனில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ‌பாலா, இந்த படம் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என்று நம்புகிறார். அவரது நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையில் டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum