தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரசியலில் குதிக்கிறார் சோனா!

Go down

அரசியலில் குதிக்கிறார் சோனா! Empty அரசியலில் குதிக்கிறார் சோனா!

Post  ishwarya Wed Apr 17, 2013 5:54 pm

“கோ” படத்தில் கொள்கை பரப்பிய வந்த கவர்ச்சி புயல் சோனாவுக்கு, நிஜத்திலும் அதுபோன்று வர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது, அதனால் விரைவில் அரசியலில் களமிறங்க திட்டமிட்டு இருக்கிறார். அதுவும் விஜய் கட்சியில் தான் சேர வேண்டும் என்று கொள்கை முடிவுடனும் இருக்கிறார்.

கவர்ச்சி நடிகையாக இருந்து, பின்னர் தொழிலதிபர், தயாரிப்பாளர் என்று பன்முகமாக இருந்து வரும் சோனா, சிலதினங்களுக்கு முன்னர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியபோது, நான் விரைவில் விஜய்யின் அரசியல் இயக்கத்தில் சேர்ந்து சேவை செய்வேன் என்று கூறியிருந்தார். இப்போது அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

முதற்கட்டமாக விஜய்யின் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொள்ள முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக விரைவில் விஜய்யையும், அவரது அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரையும் சந்திக்க இருக்கிறாராம். மேலும் தன்னை இந்த இயக்கத்தின் மகளிர் அணி தலைவி, பொறுப்பை தந்தால் சிறப்பாக சேவை செய்வேன் என்றும் கூறிவருகிறாராம்.

இதனிடையே சோனாவின் இந்த அதிரடி அரசியல் முடிவுக்கு காரணம், ஆளும் அ.தி.மு.க., கட்சி பிரமுகர் ஒருவரால் சோனாவிற்கு விடப்பட்டிருக்கும் மிரட்டல்தான் காரணம் என்கிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் வாடகை பிரச்சனை காரணமாக அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் மீது போலீசில் புகார் தெரிவித்தார் சோனா. ஆனால் போலீசாரோ அந்த அரசியல் பிரமுகரை விட்டுவிட்டு சோனாவை விசாரிக்க ஆரம்பித்துவிட்டனராம். இதனால் விஜய்யின் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் பாதுகாப்பு தேடுகிறார் சோனா என்று கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum