நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம்… சிறுநீரகங்கள் செயலிழந்தன
Page 1 of 1

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் திடீர் உடல்நலக் குறைவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
அந்தப் படம் மெகாஹிட் ஆனதால் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் வரிசையில் ரவிச்சந்திரன் இடம்பிடித்தார்.
தொடர்ந்து அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
ரஜினி, கமல் வருகைக்குப் பின், ரவிச்சந்திரன் படங்களில் நடிப்பதது குறைந்துபோனது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார் ரவிச்சந்திரன். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களிலும் நடித்தார்.
இடையில் மகன் அம்சவிர்தனை வைத்து சில படங்களையும் இயக்கினார்.
ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தேவகி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ரவிச்சந்திரனுக்கு சிறு நீரகங்கள் பாதித்து இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர் இதையடுத்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமானது. இதனால் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிசிச்சை அளிக்கின்றனர்.
செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு, உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ரவிச்சந்திரன் மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் அம்சவர்த்தன், பாலாஜி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் ரவிச்சந்திரன் தொடர்ந்து கவலைக்கிடம்
» நடிகர் வினய் கவலைக்கிடம்!
» பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!
» பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மரணம்: இன்று உடல் தகனம்!
» சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum