தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போடிநாயக்கனூர் கணேசன் – திரை விமர்சனம்

Go down

போடிநாயக்கனூர் கணேசன் – திரை விமர்சனம் Empty போடிநாயக்கனூர் கணேசன் – திரை விமர்சனம்

Post  ishwarya Wed Apr 17, 2013 12:35 pm



பன்னி மேய்க்கிற ஒரு வில்லனுக்கும், ‘தண்ணி’ விற்கிற ஹீரோவுக்கும் இடையே மோதல். நடுவில் ஒரு அழகான பெண். மிச்ச கதையை ரசிகர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், எடுத்துக்கொண்ட கதையைவிட, அதன் திரைக்கதையை ரசிக்கும்படி சொல்லியிருப்பதால் புதுமுக இயக்குனர் ஞானத்திற்கு ஒரு ஞானப்பழத்தையே கிஃப்ட் பண்ணலாம்.

ஊருக்கே அடங்காத ஒரு ரவுடி, ஒருகாலத்தில் நன்றாக படிக்கக் கூடியவன் என்ற பிளாஷ்பேக் படத்தின் பிற்பகுதியில்தான் வருகிறது என்றாலும், வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பகை எங்கிருந்து துவங்கியது? எப்போது மோதப் போகிறார்கள் என்ற ஆவலை து£ண்டியிருக்கிறார்கள்.

தன்னைவிட நன்றாக படிக்கும் கணக்கு பிள்ளையின் மகனை தனது அப்பாவே அடிக்கடி பாராட்டுவதும், இருவரையும் சேர்த்து ஒப்புமைப்படுத்தி பார்ப்பதையும் பொறுக்க முடியாத மகன் சொந்த அப்பாவையே போட்டு தள்ளுகிறான். பழி அந்த படிக்கிற மாணவன் மீது விழுகிறது. குடும்பமே சிதறிப் போக ஜெயிலில் இருந்து திரும்பும் மாணவன், கொன்றவனிடமே கூலியாக இருக்கிறான். தொழில் சாராயம் விற்பது. இந்த பிளாஷ்பேக்கெல்லாம் அறிந்த ஹீரோயின், கதாநாயகனை வெறுக்கிறாள். கடைசியில் அவன் மனம் திருந்தி அவளை காதலிக்கிறான். காதலிக்கவும் வைக்கிறான். அந்த நேரத்தில்தானா வில்லனுக்கு கல்யாண ஆசை வரவேண்டும்? சொந்த அக்கா மகளான ஹீரோயினை விரட்டி வர, வில்லனும் ஹீரோவும் கட்டி உருள்கிறார்கள். கடைசியில் ஹீரோயின் யாருக்கு என்பது அந்த போஸ்டரை தின்னும் மாட்டுக்கே கூட புரிந்த ரகசியம்தான்.

அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை ஹரிக்குமார். மெல்ல நடக்கிறார். மெலிதாக சிரிக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டும் சுறுசுறுப்பாக ஹீரோயினை வளைக்கிறார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார். காதலை சொல்கிற நேரத்தில் மட்டும் காக்காய் வலிப்பு வர, நம்மை அதிர வைக்கிறார். அந்த சமயத்தில் ஒரு பதற்றம் கூட இல்லை கதாநாயகி ஜானவி முகத்தில். அது ஏன் என்பது நல்ல திருப்பம்.

அருந்ததியிடம் பொங்கி வழிகிறது அழகு. நடிப்புக்கும் பாஸ் மார்க் கொடுக்கலாம். ‘முரட்டு மச்சான்’ பாடலில் இவரது அசைவுகள் ஸ்கூல் குழந்தைகளை பார்ப்பது போன்ற குது£கலத்தை வரவழைக்கிறது.

படத்தில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுவது பன்னி மேய்க்கிற அந்த வில்லன் சாய்ரவிதான். இவர் வருகிற காட்சிகள் எல்லாம் அடிவயிற்றில் பந்து சுழல்கிறது. (தியேட்டர் பக்கம் போயிராதீங்க பிரதர்)

தனது மனைவியை காப்பாற்றுவதற்காக நண்பனின் தம்பியை காட்டிக் கொடுக்கும் சூரி, கடைசியில் தற்கொலை செய்து கொள்கிற காட்சி மனசை ரம்பம் போட்டு அறுக்கிறது. அதை தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் அவர் போடுகிற ரம்பம் வேறு ரகம்!

இசை-ஜான்பீட்டர். குத்துப்பாடல்கள் போக எஞ்சியிருக்கிற ஒரே ஒரு மெலடியான ‘முரட்டு மச்சான்…’ பாடலை மட்டும் திரும்ப திரும்ப கேட்கலாம்.

போடிநாயக்கனு£ரை ‘போடி’ என்பார்கள் சுருக்கமாக! இனிமேல் ‘போகாதடி’ என்பார்களோ என்னவோ?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum