தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகான பெண்களை காதலித்து கொலை செய்யும் `காதல் மன்மதன்’ யார்?

Go down

அழகான பெண்களை காதலித்து கொலை செய்யும் `காதல் மன்மதன்’ யார்? Empty அழகான பெண்களை காதலித்து கொலை செய்யும் `காதல் மன்மதன்’ யார்?

Post  ishwarya Wed Apr 17, 2013 11:43 am

அழகான பெண்களை காதலித்து கொலை செய்யும் `சைக்கோ’ கொலைகாரனை கருவாக வைத்து, ஒரு பயங்கர திகில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு, `காதல் மன்மதன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். புதுமுகம் கிரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ருத்திகா, ரம்மியம் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகிறார்கள்.

கார்த்திக் ஆர்ட்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தினை ரமேஷ் இயக்குகிறார். திகில் கதையை மையமாக வைதுதள்ளி ப்படத்திற்கு மோசஸ் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ரமேஷ் கூறியதாவது;

“அழகான இளைஞன் ஒருவன். அவன் பொழுதுபோக்கே அழகான இளம்பெண்களை காதலிப்பதுதான். ஒரு பெண்ணை காதலிக்க என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பது அவனுக்கு அத்துப்படி.

முதலில் அழகால் மயக்க பார்ப்பான். முடியவில்லை என்றால் அந்தஸ்தால் மயக்க பார்ப்பான். இலையென்றால் அந்த பெண்ணின் அடிமையாகி அனுதாபத்தை பெற்று அவள் காதலை சம்பாதிப்பான். அப்படி காதலிக்கிற பெண்களை அனுபவித்தபின், கொன்று விடுவது அவன் வழக்கம்.

இந்த `சைக்கோ’த்தனமான கொலைகாரனை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள்? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum