தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்களை மச்சான் என்பதா? நடிகை நமீதாவுக்கு சேரன் கண்டனம்

Go down

ரசிகர்களை மச்சான் என்பதா? நடிகை நமீதாவுக்கு சேரன் கண்டனம் Empty ரசிகர்களை மச்சான் என்பதா? நடிகை நமீதாவுக்கு சேரன் கண்டனம்

Post  ishwarya Tue Apr 16, 2013 6:12 pm

நடிகை நமீதா விழாக்களில் பங்கேற்கும் போது கூடியுள்ள ரசிகர்களை மச்சான்கள் என்று அழைப்பது வழக்கம். பறக்கும் முத்தங்களையும் அனுப்பு வார். இதுபோல் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த அம்புலி 3டி படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழாவிலும் ரசிகர்களை பார்த்து மச்சான்கள் என்றார். விழா மேடையில் அவர் ஏறியதும் கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி விசில் அடித்தனர். உடனே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.

அத்துடன் மச்சான்களே என்று அழைத்தும் குசி படுத்தினார். நமீதா செயல் மேடையில் அமர்ந்திருந்த டைரக்டர் சேரனை எரிச்சல் படுத்தியது. உடனே மைக்கை பிடித்து நமீதாவை கண்டித்தார். அவர் பேசியதாவது:-

நமீதா இங்கு பேசியபோது ரசிகர்களை மச்சான்கள் என்றார். அதை கேட்டு எல்லோரும் கை தட்டி விசில் அடித்தனர். பொது மேடையில் அவர் இது போல் பேசி இருக்கிறார். இது நியாயமா? நம்ம வீட்டு பொண்ணுங்க இது போல் மேடையில் நின்னு கிஸ் கொடுத்தாலோ மச்சான்கள் என்றாலோ ரசிப்போமா மக்கள் மனசு மாறிப் போச்சு என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.

விழா முடிந்ததும் இது குறித்து நமீதாவிடம் கேட்ட போது ரசிகர்கள் மீது எனக்குள்ள அன்பையும் பற்றுதலையும் காட்டவே அவர்களை மச்சான் என்கிறேன். வருடக்கணக்காக இது போல் அழைத்து வருகிறேன். இதில் தவறு இருப்பதாக கருதவில்லை.

சேரன் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக அம்புலிபாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் தேனப்பன், சாமிநாதன், அன்பாலயா பிரபாகரன், தனஞ்செயன், அம்புலி படத்தின் இயக்குனர்கள் ஹரி சங்கர், ஹரீஸ், நாராயணன், தயாரிப்பாளர் கே.டி.வி.ஆர். லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்னிந்திய நடிகைகளை குடிகாரர்கள் என்பதா? – சனாகானுக்கு த்ரிஷா கண்டனம்
» நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள் – டி.ராஜேந்தர் கண்டனம்
» ஆபாச போஸ் கொடுப்பதா?: நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» சேலையில் கடவுள் படம்: இந்து மக்கள் கட்சிக்கு நடிகை குஷ்பு கண்டனம்
» நடிகை அஞ்சலிக்கு மிரட்டல்: தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை தடுப்பதா? நடிகர் கரண் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum