தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேலையில் கடவுள் படம்: இந்து மக்கள் கட்சிக்கு நடிகை குஷ்பு கண்டனம்

Go down

சேலையில் கடவுள் படம்: இந்து மக்கள் கட்சிக்கு நடிகை குஷ்பு கண்டனம் Empty சேலையில் கடவுள் படம்: இந்து மக்கள் கட்சிக்கு நடிகை குஷ்பு கண்டனம்

Post  ishwarya Fri Mar 29, 2013 4:54 pm

நடிகை குஷ்பு கடவுள் படம் போட்ட சேலை உடுத்தி சினிமா விழாவில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், அனுமன் போன்றோரின் படங்கள் அவர் அணிந்திருந்த சேலையின் பார்டரில் இடம் பெற்றிருந்தன.

ஐதராபாத்தில் நடந்த படவிழா ஒன்றுக்கு இந்த சேலையை உடுத்தி சென்றார். விழாவில் கலந்து கொண்டவர்கள் அச்சேலையில் அவரை ஆச்சரியமாக பார்த்தனர். கடவுள் படங்களையும் உற்று நோக்கினர். கடவுள் படத்துடன் கூடிய சேலையை நடிகை குஷ்பு அணிந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்துக் கடவுள்களை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இந்த பிரச்சினை குறித்து குஷ்புவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இந்த பிரச்சினையை நான் கண்டு கொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் இதை பெரிதுப்படுத்துகிறார்கள். நான் அவர்களைப் போல் இல்லை. ஏனென்றால் எனக்கு இதை விட வேறு நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. சிலர் என் மூலமாக விளம்பரம் தேட முயற்சிக்கின்றனர். அதற்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாச போஸ் கொடுப்பதா?: நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்
» ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஷம்முவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» பெண்களை புகைபிடிக்க தூண்டுவதா? நடிகை சனாகானுக்கு “சிகரெட்” அனுப்பும் போராட்டம் – இந்து மக்கள் கட்சி
» விழாக்களில் ஆபாச உடை: நடிகை சோனாவுக்கு எதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum