உலக பயணம் போகும் ஹாரிஸ்… 3டி இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்
Page 1 of 1

இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உலக நாடுகளில் இசைப்பயணம் மேற்கொண்டு மேடை இசை கச்சேரிகள் நடத்துகிறார். 3 டி முறையில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஹாரீஸ் ஜெயராஜ் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
நான் இசை அமைப்பாளராகி 10 வருடங்கள் ஆகி விட்டன. கவுதம்மேனன் என்னை அறிமுகப்படுத்தினார். மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும்படி ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன. அதை ஏற்று உலக இசைப்பயணம் செல்கிறேன்.
முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஹைதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும்.
3 டி இசை நிகழ்ச்சிகள்
3டி தொழில் நுட்பத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி இருக்கும். வெளிநாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இசை கச்சேரியில் இடம் பெறும். பிரபல பாடகர்கள் ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஷ் ராக வேந்திரா உள்பட 17 பேர் மேடையில் தோன்றிப் பாடுவார்கள்.
உலகத் தரத்தில், மைக்கேல் ஜாக்ஸன் போன்றோரின் இசை நிகழ்ச்சி மாதிரி தரமானதாக இந்த கச்சேரிகள் அமைய வேண்டும். சாதாரண மக்களும் உயர்ந்த தரத்திலான துல்லிய சவுண்டில் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
டெக்பிரண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக தரத்தில் புது அனுபவமாக இது இருக்கும்.
இயக்குனர் விஜய் மேற்பார்வையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக 4 மாதங்கள் படங்களுக்கு இசை அமைப்பதை நிறுத்தி வைத்துள்ளேன்,” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹாரிஸ் இசையில் தனுஷ்!
» சான் பிரான்ஸிஸ்கோவிலும் கச்சேரி நடத்துகிறார் இசைஞானி!
» அழைத்தார் கவுதம் இணைந்தார் ஹாரிஸ்
» பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை அசின் டி.வி.க்கு மாறினார்: ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்துகிறார்
» செல்வராகவனுடன் இணையும் ஹாரிஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum