விதண்டாவாத கேள்வி…வேதனைப்பட்ட டைரக்டர்கள்
Page 1 of 1

இரட்டை குதிரையில் ஒற்றை வீரனாக சவாரி செய்த டைரக்டர் சசிகுமாரையும் அந்த ஆக்ரோஷமான ட்ரெய்லரையும் பார்த்தால், ஊர்ல இருக்கிற காணி கரையெல்லாம் வித்துட்டு கூட இந்த படத்தை வாங்கலாம் என்ற நினைப்பு வரும். ’சறுக்குன காலுதான் இறுக்கி நடக்கும்’ என்பது போல அடுத்த வெற்றிக்கு தயாராகியிருக்கிறது சமுத்திரக்கனி, சசிகுமார் நட்பு கூட்டணி.
அதற்கு முன் வந்த சறுக்கல் ’ஈசன்’ என்பதை இன்டஸ்ட்ரி அறியும். அது போகட்டும்…. இவர்களின் இப்போதைய படைப்பான ’போராளி’ எப்படிப்பட்ட கதை? எப்படிப்பட்ட பிரசன்டேஷன்? என்பதை நிருபர்களுக்கு காண்பித்தார்கள் இருவரும். ஒரு ரெண்டு நிமிட ட்ரெய்லர் அவ்வளவு எளிதில் மனதில் புகுந்து மந்திரம் போட முடியுமா என்று வாதிடுகிறவர்கள், இதை பார்த்திருந்தால் கப்சிப் ஆகியிருப்பார்கள்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்குதான் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தோம். அதனால்தான் விநியோகஸ்தர்களுக்கு கூட காட்டாமல் உங்களுக்கு காண்பிக்கிறோம் என்றார் சமுத்திரக்கனி. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு போராளி இருக்கிறான். போராட்டம் இருக்கிறது. அதைதான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம் என்றார் அவர்.
ஆந்திராவிலிருந்து அல்லரி நரேஷ், மலையாள திரையுலகத்திலிருந்து இரண்டு நடிகர்கள், மீண்டும் சுப்ரமணியபுரம் ஸ்வாதி என்று படத்திற்கு தேவையான நடிகர் நடிகைகளை பொறுத்தமாக கோர்த்து கதம்பமாக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.
திரண்டிருந்த நிருபர் கூட்டத்திலிருந்து ஒரு ஆஃப் பாயில் கேள்வியும் பறந்து வந்து மூட் அவுட் ஆக்கியது மொத்த பேரையும். தமிழ் படம் எடுக்கிறீங்க, எதுக்கு ஆந்திராவிலிருந்தும், கேரளாவிலிருந்தும் நடிகர்களை கொண்டு வந்து நடிக்க வைக்கணும்? அதுவும் படமே இல்லாமல் வீட்ல கிடக்கும் தெலுங்கு நடிகரை கூட்டிட்டு வந்து? இதுதான் அந்த கேள்வி. (இத்தனைக்கும் அல்லரி நரேஷ் ஆந்திராவில் சில வெற்றிப்படங்களை கொடுத்து இப்போதும் பிசியாக இருப்பவர்) என்னண்ணே இப்படி கேட்கிறீங்க என்ற சமுத்திரக்கனியிடம் மேலும் விதண்டாவாதம் செய்தது அது. ’தமிழ்லதான் கேட்கிறேன்’ என்று!
தனது அக்கா கணவர் இறந்த துக்க செய்தி ஒருபுறம். அதற்கு கூட இந்த பிரஸ்மீட்டை முடித்துவிட்டுதான் போக வேண்டும் என்ற கட்டாயம் மறுபுறம். இதற்கிடையில் இப்படி விதண்டாவாத கேள்வி வேறு. எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்தோடு அங்கிருந்து கிளம்பினார் சமுத்திரக்கனி. .
பளபளப்பான கண்ணாடிகள் கூட பக்குவமில்லாத கற்களை கண்டு அஞ்சதான் வேண்டியிருக்கிறது ஒவ்வொரு முறையும். என்ன செய்வது?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» த்ரிஷாவை மொய்க்கும் டைரக்டர்கள்!
» ரூ.67லட்சம் மோசடி புகார் : இரு டைரக்டர்கள் கைது!
» நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே டைரக்டர்கள் விரும்புகிறார்கள்: நடிகை மோனிகா பேட்டி
» நடிகர் சீனிவாசன் கைதால் 4 படங்கள் முடக்கம்: டைரக்டர்கள் தவிப்பு
» எளிய கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum