‘காஞ்சனா பேய்’ பயத்தில் பள்ளி மாணவன் தற்கொலை!
Page 1 of 1
‘காஞ்சனா பேய்’ பயத்தில் பள்ளி மாணவன் தற்கொலை!
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ள தமிழ் சினிமா காஞ்சனா படத்தைப் பார்த்த பள்ளி மாணவன் ஒருவன், பேய் பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
ஈரோடு ராஜாஜிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தண்டபாணியின் மகன் இளவரசன். பதினைந்து வயது சிறுவனான இவன், அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளவரசனும் அவனது நண்பர்களும் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா என்ற திரைப்படம் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.
அன்று முதல் பேய் பயத்தில் தவநித்த இளவரசன், இரவில் தூங்கும் போது எழுந்து பல தடவை பயத்தில் சத்தம் போட்டானாம். அவனை அமைதிப்படுத்திய பெற்றோர்கள் தொடர்ந்து அவனது பயத்தை போக்க கோவிலுக்குப் போய் திருநீர் கொண்டுவந்து இளவரசனுக்குக் கொடுத்துள்ளனர்.
தற்கொலை
கடந்த 4ம் தேதி இரவில் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன் எழுந்து வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தீக்காயத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளவரசனுக்கு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தான்.
இதுகுறித்து இளவரசனின் அப்பா தண்டபாணி கூறுகையில், “காஞ்சனா திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த பின்னர் சி.டி.யை வாங்கி வந்து வீட்டில் உள்ள டிவியில் மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்தான்.
பின்னர் ஏதோ ஒரு உருவம் தன் கண்முன்னால் வந்து நிர்ப்பாதாக எங்களிடம் சொன்னான்,
பள்ளிக்கூடத்திலும் யாரிடமும் பேசாமல் பைத்தியம் பிடித்தவன் போல இருந்துள்ளான். அதற்கு தலைமை ஆசிரியர், “உன் அப்பாவையோ, அம்மாவையோ நாளைக்கு கூட்டிக்கொண்டு வா….”, என்று சொல்லியனுப்பியுள்ளார்.
எங்களிடம் ‘என்னைக் கொன்று விடுங்கள், எனக்கு பயமாக உள்ளது’ என்றும் கூறி அழுதான். சம்பவத்தன்று நானும் என் மனைவியும் வெளியில் படுத்திருந்தோம், தனியறையில் படுத்திருந்த இளவரசன் நடு ராத்திரியில் எழுந்து மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துகொண்டான்,” என்றார் கண்ணீருடன்.
இளவரசனின் தீக்குளிப்பு பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.
படங்களைத் தடை செய்ய வேண்டும்
சிறார்களின் மனங்களைப் பாதிக்கும் வகையிலான, இதுபோன்ற படங்களை சென்சார் போர்டு எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட கதைகளுடன் கூடிய படங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் பள்ளி மாணவன் வேடத்தில் தனுஷ்
» பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை: நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» காமினி காஞ்சனா
» காஞ்சனா பார்த்த ரஜினி லாரன்சுக்கு பாராட்டு
» காஞ்சனா, மங்காத்தா வெற்றி…சென்னையில் செட்டிலான லட்சுமிராய்
» பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை: நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» காமினி காஞ்சனா
» காஞ்சனா பார்த்த ரஜினி லாரன்சுக்கு பாராட்டு
» காஞ்சனா, மங்காத்தா வெற்றி…சென்னையில் செட்டிலான லட்சுமிராய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum