தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஞ்சனா பார்த்த ரஜினி லாரன்சுக்கு பாராட்டு

Go down

காஞ்சனா பார்த்த ரஜினி லாரன்சுக்கு பாராட்டு Empty காஞ்சனா பார்த்த ரஜினி லாரன்சுக்கு பாராட்டு

Post  ishwarya Tue Apr 16, 2013 2:45 pm

விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் காரர்களுக்கும் கண் திறந்த கடவுளாகிவிட்டாள் காஞ்சனா. இன்னமும் காட்டு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது படம். கலெக்ஷனோ கை நிறைய நிறைய… இந்த படத்தை இந்திக்கு கொண்டு போகிற அளவுக்கு உற்சாகமாகிவிட்டார் லாரன்ஸ்.

இவர் எதை செய்தாலும் முதல் ஆசிர்வாதம் ரஜினியிடமிருந்துதான் கிடைக்கும். இவரும் அவரை கடவுளாகவே கருதி வருகிறார். ஏனென்றால் ஒரு சினிமா கம்பெனியில் டீ காபி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த லாரன்சை நடன கலைஞர்கள் சங்கத்தில் சேர்த்துவிட்டவரே ரஜினிதான். அன்றிலிருந்துதான் லாரன்ஸ் வாழ்வில் பொற்காலம் துவங்கியது.

அந்த நன்றியை இன்றும் மறக்காத லாரன்ஸ், அதை எல்லா சந்தர்பங்களிலும் நிரூபித்து வருகிறர். தற்போது தனது இயககத்தில் வெளிவந்து சக்கைப் போடு போடும் காஞ்சனாவையும் ரஜினிக்கு காட்ட விரும்பினாராம். இவரது விருப்பம் அறிந்த ரஜினி, ஓ.கே சொல்ல, பிரத்யேகமாக ரஜினி வீட்டிலேயே படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார் லாரன்ஸ்.

லாரன்ஸ் தும்மினாலே ஆஹா என்று பாராட்டுகிற ரஜினி, பொழுதுபோக்கின் உச்சமான இந்த படத்தை பாராட்டாமல் இருப்பாரா? சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார் லாரன்ஸ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum