யார் குடும்பத்தையும் கெடுக்கமாட்டேன் – ஆன்ட்ரியா ஆவேசம்
Page 1 of 1

தனுஷ் நடிக்கும் மயக்கம் என்ன படத்தின் பாடல் வெளியீட்டு விழா இம்மாதம் நடைபெற இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் இதற்கு முன்பு செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாடவும் செய்திருந்தார் அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ஆன்ட்ரியா. ஆனால் இந்த படத்தில் ஆன்ட்ரியா பாட வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் ஆசைப்பட்டும் நடக்கவில்லை. ஏன்?
அவர்தான் படத்திலிருந்தே நீக்கப்பட்டுவிட்டாரே. கொஞ்சம் பழைய செய்திகளை புரட்டிப்பார்க்கும் பழக்கமுள்ளவர்களுக்கு தெரியும், இப்படத்தின் முந்தைய நாயகி ஆன்ட்ரியாதான் என்று. தனுஷும் இவரும் இணைந்து பல நாட்கள் நடித்து முடித்தபின் திடீரென்று படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் காதலும் வந்தது. கல்யாணத்திலும் முடிந்தது. புதிதாக வந்தவர் போட்ட முதல் நிபந்தனையே இந்த படத்தில் ஆன்ட்ரியா நடிக்கக் கூடாது என்பதுதான். மனைவி சொல்லே மந்திரம் என்று ஆன்ட்ரியாவை படத்திலிருந்து நீக்கிய செல்வா, அதன்பின் ரிச்சா என்ற புதுமுகத்தை அவருக்கு பதிலாக நடிக்க வைத்தார்.
சமீபத்தில் சென்னை வந்த ஆன்ட்ரியாவிடம் செல்வராகவன் சோனியா பிரிவுக்கு நீங்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறதே என்றால் எவ்வளவு வேதனைப்படுவார்? நியாயமாக இந்த கேள்வியை செல்வராகவனின் புது மனைவியிடம் அல்லவா கேட்க வேண்டும்? இருந்தாலும் இந்த கேள்விக்கு பதிலளித்தார் அவர்.
எனக்கும் அப்பா அம்மா என்று குடும்பம் இருக்கிறது. யார் வாழ்க்கையிலும் நான் தலையிட மாட்டேன். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் விரும்பும் வாழ்க்கை வாழலாம். உண்மையை சொல்ல வேண்டுமானால் அதில் குறுக்கீடு செய்ய யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. என்னை சுற்றி நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. அதற்காக என்னை அப்படிப்பட்டவள் என்று நினைக்க வேண்டாம். நறுக்கென்று பதில் சொல்லிவிட்டு அகன்றார் ஆன்ட்ரியா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்னது நிர்வாணமா நடிச்சேனா… பொய் பொய் முழு பொய்! – ஆன்ட்ரியா ஆவேசம்
» குடும்பத்தையும் கவனியுங்கள்
» ‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்?
» யார் யார், எந்த மாதிரியான சோப்பை பயன்படுத்தலாம்?
» காதல் வயப்பட்டார் ஆன்ட்ரியா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum