தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘தேநீர் விடுதி’யால் நொந்துபோன எஸ்.எஸ்.குமரன்!

Go down

‘தேநீர் விடுதி’யால் நொந்துபோன எஸ்.எஸ்.குமரன்! Empty ‘தேநீர் விடுதி’யால் நொந்துபோன எஸ்.எஸ்.குமரன்!

Post  ishwarya Sat Apr 13, 2013 6:08 pm

‘ச்சூ… ச்சூ… மாரி…’ என்ற பாடல் மூலம் பிரபலமானவர் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். ‘பூ’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவனர், ‘களவாணி’ படத்திற்கும் இசையமைத்து ஹிட் கொடுத்தார். அதன் பிறகு இயக்குநர் ஆசை வரவே ‘தேநீர் விடுதி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் போட்ட காசைக்கூட எடுக்கவில்லை என்பதால் மனிதர் நொந்து போய் விட்டார். இனி இயக்குநர் வேலையே வேண்டாம். இசையமைப்பாளர் பணியே போதும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘தேநீர் விடுதி’ என்ற படம் இயக்கி, தயாரித்தேன். படத்தை ரிலீஸ் செய்துவிட்டு பிரிண்ட் காசைக்கூட வசூல் பண்ண முடியாமல் இருக்கிறேன். தியேட்டர்காரர்கள் தர வேண்டிய பணத்தை ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என்று தவணை முறையில் செக் போட்டு தருகிறார்கள். ரிலீசுக்கு போஸ்டர் ஒட்டக் கொடுத்தால் பாதி போஸ்டர் ஒட்டப்பட்டு, 10 நாளுக்கு பிறகு நான் கொடுத்த போஸ்டரை பாதி விலைக்கு என்னிடமே விற்கிறார்கள்.

கசப்பான அனுபவத்தில் பாடம் கற்றேன். இனிமேல் இசையில்தான் முழு கவனம். அடுத்து விஜயன் இயக்கும் ‘லஷ்மி’ என்ற படத்துக்கு இசை அமைக்கிறேன். மேலும் 2 படங்கள் இசை அமைக்க பேச்சு நடக்கிறது.

டிகாஷன் ஓவர் ஸ்ட்ராங்காகிடுச்சோ……?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum