தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு ஐகோர்ட் உத்தரவு!

Go down

ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு ஐகோர்ட் உத்தரவு! Empty ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு ஐகோர்ட் உத்தரவு!

Post  ishwarya Sat Apr 13, 2013 4:40 pm

தேர்தல் விதியை மீறியதாக தொடர்ந்த வழக்கில் நடிகை குஷ்பு, ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகை குஷ்பு தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களிலும் அவர் பிரசாரம் செய்தார். தேர்தல் அதிகாரி மற்றும் போலீசாரிடம் அனுமதி பெறாமல் நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆண்டிப்பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கில் நடிகை குஷ்பு மீது தேனி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது குஷ்பு கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் முன்ஜாமீன் கேட்டு குஷ்பு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் முக்கியமான அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்றும், அக்கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறி இருந்தார். அத்துடன் தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரான குஷ்பு ஆண்டிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். இதே போன்று பழனிசெட்டிபட்டி போலீசார் பதிவு செய்த வழக்கிலும் குஷ்பு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை குஷ்புவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்கள் குறித்து பேட்டி: நடிகை சோனா கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட்டு உத்தரவு
» செக் மோசடி வழக்கு: கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜராக சம்மன்
» ரமலத் தொடர்ந்த வழக்கு-நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
» குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum