ரமலத் தொடர்ந்த வழக்கு-நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
Page 1 of 1

ரமலத் என்கிற லதா தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 19ம் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி நடிகை நயனதாரா, நடிகர் பிரபுதேவா ஆகியோருக்கு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நயனதாரா மீது கள்ளக் காதல் கொண்டுள்ள பிரபுதேவா தனது மனைவியை விட்டு பிரிந்து ஹைதராபாத்திலேயே குடியிருந்து வருகிறார். அவரை சமாதானப்படுத்தி, நயனதாராவை விட்டு விலக வைக்க மனைவி ரமலத் கடுமையாகப் போராடிப் பார்த்தார். ஆனால் யாருடைய பேச்சையும் பிரபு தேவா கேட்டதாக தெரியவில்லை.
அத்தோடு நில்லாமல், தானும், நயனதாராவும் டிசம்பர் மாதம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், நயனதாரா எனக்கு மிகவும் முக்கியம் என்றும் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து பொறுத்துப் பார்த்த ரமலத் பொங்கி எழுந்து குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது கணவருடன், நடிகை நயனதாரா கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அவரிடமிருந்து மீட்டு எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும் நடிகை நயனதாராவின் செயல் தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெண்களுக்கும் விடப்பட்ட பகிரங்க சவால் என்றும் அவர் கூறியிருந்தார்.
வில்லு மூலம் வந்த ‘வில்லி’ நயனதாரா
இந்த நிலையில் நேற்று தனது பிள்ளைகளோடு கோர்ட்டுக்கு வந்த ரமலத் மீண்டும் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,
எனது கணவர் பிரபுதேவா 2008-ம் ஆண்டு வில்லு என்ற படத்தை இயக்கிய போது, அந்தப் படத்தின் கதாநாயகி நயன்தாரா, எனது வாழ்க்கையில் வில்லியாக மாறினார்.
ஊர் ஊராக சென்று உல்லாசம்
அந்தப் படத்தை இயக்கியபோது பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஆரம்பித்த நட்பு, காதலாக மாறி, கடைசியில் கள்ளக்காதலாக முடிந்தது. சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் 2 பேரும் ஊர் ஊராகச் சென்று உல்லாசம் அனுபவிக்கின்றனர். மேலும் 2 பேரும் ரகசியமாக ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்திருந்தன.
இவர்கள் 2 பேருக்கும் இடையே உள்ள உறவையும், நெருக்கத்தையும் படமாகவும், செய்தியாகவும் பத்திரிகைகள், டி.வி.கள் காட்டும்போது நான் மிகவும் வருத்தமடைந்திருக்கிறேன். (இதற்கான செய்திகள், படங்களையும் தனியாக ரம்லத் தாக்கல் செய்துள்ளார்).
இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பிரபுதேவா சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அது 13.9.10 அன்று வெளியானது. அதில் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். இது எனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனது வாழ்க்கை பாதிக்கப்படும்
இதனால் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. நான் எந்தத் தவறும் செய்யாத நிலையில் எனது வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி கேட்டபோது, அது அவரது பேட்டி தான் என்று உறுதி செய்தார். ஆனால் இந்த சட்டவிரோதமான நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.
என்னைக் கேவலப்படுத்தி விட்டார் நயனதாரா
இந்த நிலையில், நடிகை நயன்தாரா என்னை தொடர்பு கொண்டு அவர்களின் 2-ம் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும்படி வற்புறுத்தினார். இது இன்னும் என்னை கேவலப்படுத்துவதுபோல் ஆகிவிட்டது.
இது எனக்குமட்டுமல்ல, கலாசாரத்தை பின்பற்றும் தமிழ்ப் பெண்கள் அனைவருக்குமே விடப்பட்ட சவாலாகும்.
பிரபுதேவா குடும்பத்தினர் துன்புறுத்துகின்றனர்
இந்த உறவால், பிரபுதேவா தனக்கிருந்த நற்பெயரை குழிதோண்டி புதைத்துவிட்டார். சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவரை இதுபோன்று வாழ அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாகி பாரம்பரியங்களை பின்பற்றி வாழும் நமது கலாசாரம் வீணாய்ப் போக வழிவகுத்துவிடும்.
பிரபுதேவாவை, நான் திருமணம் செய்து கொண்டதை அவரின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பிரபுதேவா-நயன்தாரா திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று என்னை துன்புறுத்துகின்றனர்.
கள்ளக்காதலர்கள் எப்படி சிறந்த ஜோடியாவார்கள்?
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் சிறந்த ஜோடியாக ஹைதராபாத்தில் தேர்வு செய்யப்பட்டதாக சமீபத்தில் வெளியான பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கள்ளத்தொடர்பு வைத்துள்ளவர்களை எப்படி சிறந்த ஜோடியாக தேர்வு செய்தார்களோ தெரியவில்லை.
அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவரையே நம்பி வாழும் எங்களுக்கு கடும் பிரச்சினைகள் ஏற்படும். எனவே டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அவர்களின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவர்கள் 2 பேரையும் பொது இடங்களில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். அவர்கள் 2 பேரும் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், இணைந்திருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.
இந்த வழக்கு முடியும் வரை தங்களை கணவன்-மனைவி என்று அறிவிக்க தடை விதிக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ரமலத்.
இந்த மனு நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் நயனதாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் விளக்கம் அளிக்குமாறு பணித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கும் அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 19ம் தேதி நயனதாராவும், பிரபுதேவாவும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதுதான் நீதிபதியின் உத்தரவு என்று ரமலத்தின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபுதேவா – நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்?
» ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா – நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்
» 5 ஆண்டுகாலமாக நடக்கும் ஆபாச நடன வழக்கு… மல்லிகா ஷெராவத் ஆஜராக வதோரா கோர்ட் சம்மன்
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
» கற்பழிப்பு வழக்கு: மன்சூர் அலிகானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum