தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று ’7ஆம் அறிவு’ ஆடியோ ரிலீஸ்!

Go down

இன்று ’7ஆம் அறிவு’ ஆடியோ ரிலீஸ்! Empty இன்று ’7ஆம் அறிவு’ ஆடியோ ரிலீஸ்!

Post  ishwarya Sat Apr 13, 2013 4:31 pm

சூர்யாவின் இரண்டு விதமான அசத்தல் நடிப்பில் உருவாகிவரும் ’7ஆம் அறிவு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பாடல் வெளியீட்டுடன் இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்படுகிறது. இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்…

1. ஓ ரிங்கா ரிங்கா… – பா.விஜய் எழுதியுள்ள இப்பாடலை ரோஷன், ஜெர்ரி ஜான், பென்னி தயாள், சுசித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்.

2. முன் அந்தி… – நா.முத்துக்குமார் எழுதியுள்ள இப்பாடலை கார்த்திக், மேஹா ஆகியோர் பாடியுள்ளனர்.

3. எல்லே லாமா… – நா.முத்துக்குமார் எழுதியுள்ள இப்பாடலை விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி, ஸ்ருதி ஆகியோர் பாடியுள்ளனர்.

4. யம்மா யம்மா… – கபிலன் எழுதியுள்ள இப்பாடலை எஸ்.பி.பி, ஸ்வேதா மேனன் ஆகியோர் பாடியுள்ளனர்.

5. இன்னும் என்ன தோழா… – பா.விஜய் எழுதியுள்ள இப்பாடலை பல்ராம், நரேஷ் ஐயர், சுஜித் சுரேஷன் ஆகியோர் பாடியுள்ளனர். (இப்பாடல்தான் ஈழத்தமிழருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார்)

6. தி ரைஸ் ஆப் டாமோ – மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த சீன மொழிப் பாடலுக்கு, சீனப் பாடகி ஹெள வாங் பாடியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum