தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

7ஆம் அறிவு – திரை விமர்சனம்

Go down

7ஆம் அறிவு – திரை விமர்சனம் Empty 7ஆம் அறிவு – திரை விமர்சனம்

Post  ishwarya Thu Apr 11, 2013 1:54 pm



7 விண்ணை முட்டும் எதிர்பார்ப்புகளோடு வந்திருக்கும் படம்..! 7ஆம் அறிவு.

மறக்கப்பட்ட தமிழரின் பக்கங்களைச் சொல்லும் படம் என்ற கேப்ஷனும் சூர்யா முருகதாஸ் கூட்டணியும் எதிர்பார்ப்பை எகிற வைத்தன. ஆனால், எதிர்பார்ப்பு ஈடேறவில்லை என்பதுதான் படம் பார்த்தபின் ஏற்படும் உணர்வு!

சீனாவின் ஷாவ்லின் கோவிலில் தொடங்குகிறது படம். அந்தக் கோவிலில் தெய்வமாக இருப்பவர் தமிழகத்தில் இருந்து சீனாவுக்குச் சென்ற பல்லவ மன்னன் போதி தர்மன் என்ற செய்தியை அடுத்து போதி தர்மன் சீனாவுக்குச் சென்றதும் அங்கே அவர் செட்டில் ஆனதும் காட்சிகளாக விரிகிறது. அப்பட்டமான டாகுமெண்டரிதனம்! அதை மேலும் வலுப்படுத்துவது போல இருக்கிறது பின்னணி குரல்!

அந்த போதி தர்மன் கற்றுத் தந்த நோக்கு வர்மம், தற்காப்புக் கலையில் தேர்ந்த ஒருவன் சீன அரசின் ஆணைப்படி (சென்சாரில் மியூட் பண்ணினாலும் சீன அரசு என்பது புரிகிறது) தமிழர்களை… குறிப்பாக ஸ்ருதிஹாசனைக் கொல்ல வருகிறான் என்று கதையை ஆரம்பிக்கிறார் முருகதாஸ். அவரை ஏன் கொல்ல வேண்டும் என்றால் ஸ்ருதிதான் டி.என்.ஏ. ஆராய்ச்சி மூலமாக போதி தர்மனின் வழித் தோன்றல்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆராய்ச்சியால் இந்தியாவில் பரவ விடத் திட்டமிட்டிருக்கும் நோய் கிருமிகள் பரவாமல் போய்விடுமோ… அதை வைத்து பிசினஸ் பண்ண நினைக்கும் தன் திட்டம் பாழாகிவிடுமோ என்ற சீனாவின் பயம்தான் காரணம். போதி தர்மனின் வழித் தோன்றல் மூலம் அவரை மீண்டும் உருவாக்கி பயோ வார் நடத்தத் திட்டமிடும் சீனாவை எப்படி முறியடிக்கிறார் ஸ்ருதி என்பதுதான் படம்!

சொல்லும்போது கோர்வையாகத் தெரிந்தாலும் படத்தில் இவ்வளவு கோர்வை இல்லை. டாகுமெண்டரி ஃபீலிங்கில் படம் நெடுக சரித்திர, விஞ்ஞான, மருத்துவ, மரபணுச் சோதனை பற்றிய கருத்துகளை யாராவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலவீனமே இந்த விவரணைகள்தான்..! அதிலும் ஆரம்பக் காட்சிகளாக வரும் போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றுப் பாடம் என்றால் கடைசியாக வரும் போதி தர்மன் மறு உருவாக்கம் அப்படியே தலைசுற்றும் சயின்ஸ் கிளாஸ்! எங்கே புரியாமல் போய்விடுமோ என்ற கவலையில் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்ன விதத்தில் முருகதாஸுக்கு வெற்றிதான். ஆனால், எல்லாம் புரியுது… ஆனா, சுவாரஸ்யமாக இல்லையே என்று கடைக்கோடி ரசிகன் சொல்வது அவருக்கு மைனஸ்தான்!

போதி தர்மன் மற்றும் அவருடைய வழித் தோன்றலாக அரவிந்தன் என்ற சர்க்கஸ் கலைஞன் ஆகிய வேடங்கள்

சூர்யாவுக்கு! உடலை இறுக்கமாகக் கட்டி வைத்துக் கொண்டு அழகுப் போட்டி ரேஞ்சுக்கு அங்கும் இங்கும் நடக்கிறார். போதி தர்மன் வேடத்துக்கான உழைப்பின் களைப்பு அரவிந்தன் வேடத்தில் தெரிகிறது. பொலிவு மிஸ்ஸிங் சார்! கவனமாக இருங்க! சர்க்கஸ் கலைஞராக அவருடைய உழைப்பு அபாரமாக இருக்கிறது. மற்றபடி ஆட்டம் பாட்டம், ஆக்‌ஷன் காட்சிகளில் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கியிருக்கிறார். படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்னால் இருபது நிமிடங்கள் சூர்யா இல்லவே இல்லை… ஸ்ருதி மீதுதான் பயணிக்கிறது. கதை. ஆனால், க்ளைமாக்ஸ் சண்டையில் ஸ்கோர் பண்ணிவிட முடியும் என்ற தைரியத்துக்கு பாராட்டலாம்.

ஸ்ருதி அழகாக இருக்கிறார். தமிழ்தான் கொஞ்சம் தடுமாறுகிறது. சூர்யாவின் பக்கத்தில் நிற்கும்போது உயரமாக இருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறார். எக்ஸ்பிரஷன் ஏரியாவில் அப்பாவிடம் கொஞ்சம் க்ளாஸ் வைத்துக் கொள்ளுங்கள் மேடம்!

படத்தின் அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டு செல்பவர் வில்லன் ஜானி ட்ரி நுயன் தான்! அமர்த்தலான அவருடைய நடையும் வசியம் செய்யும் கண்களும் அவருக்கு பெரும் பலம். மிகக் குறைவான வசனங்களோடு அவர் படம் நெடுக அசத்துகிறார்.ஹாரீஸின் இசையில் பாடல்களில் பழைய வாசனை..! படத்துக்கு பெரும் ஸ்பீட் பிரேக்கர்கள்!

பீட்டர் ஹெயினின் சண்டைக்காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.மிக விளக்கமாகவும் விவரணையோடும் பல விஷயங்களைச் சொல்லியிருந்தாலும் மனதுக்குள் எழும் சில ஏன்… எதற்கு… எப்படிகள்..?

ஸ்ருதிஹாசன் சூர்யாவை பின் தொடர்வது போலவே தெரியவில்லையே… அவர்தான் ஸ்ருதியின் இலக்கு என்னும்போது சும்மா இருப்பதும் சூர்யா அவரைத் தேடி அலைவதுமாக இருப்பது ஏன்..?இந்தக்கதைக்கு நடுவே இலங்கைத் தமிழர் விவகாரத்தையெல்லாம் இழுக்கிறீர்களே… எதற்கு..?

சீனாவில் இருந்து வந்து இறங்கும் வில்லன் ஜானி சென்னையிலேயே புழங்கிய ஆட்டோகாரர் ரேஞ்சுக்கு சந்து பொந்தெல்லாம் செல்ஃப் டிரைவிங்கில் சுற்றி வருவது எப்படி..?

முருகதாஸ் கடுமையாக உழைத்திருக்கிறார்… ஏராளமான தகவல்களை திரட்டியிருக்கிறார்… அவை எல்லாவற்றையும் வீணாக்காமல் கொட்டிவிட நினைத்துவிட்டார்… அங்கேதான் சிக்கலாகி விட்டது.

எதிர்பார்ப்பு ஈடேறவில்லை என்பதுதான் படம் பார்த்தபின் ஏற்படும் உணர்வு!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum