சௌசௌ பொரியல்
Page 1 of 1
சௌசௌ பொரியல்
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- சௌசௌ – 1
- வெங்காயம் – 1
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- காய்ந்த மிளகாய் – 2 முதல் 3 வரை
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
- சௌசௌவை தோல் சீவி, அதனுள் இருக்கும் விதையையும் வெள்ளைப் பகுதியையும் நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சௌசௌ துண்டுகளைப் போட்டு அத்துடன் ஒரு கை தண்ணீரைத்
தெளித்து மிதமான தீயில் வேக விடவும். காய் குழைந்து விடக்கூடாது.
(மைக்ரோவேவ் அவனில் வைத்தும் வேக விடலாம்). - ஒரு வாணலியில் எண்ணையை விட்டு அதில் கடுகு போட்டு, கடுகு வெடிக்க
ஆரம்பித்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு
சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும், மிளகாயைக் கிள்ளிப் போடவும்.
பெருங்காயத்தூள், கறிவேப்பிலையையும் போட்டு சற்று வதக்கி, பின் அதில்
வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள
காய், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும். - விருப்பப்பட்டால் இதன் மேல் சிறிது துருவிய தேங்காய் அல்லது மாங்காய், காரட் போன்றவற்றைத் தூவி பரிமாறலாம்.
- காயை மைக்ரோ அவனில் வைத்து, அது வேகும் முன், அடுப்பில் தாளிப்பை
செய்து விட்டால், தாளிப்பு தயாராகவும், காய் வேகவும் சரியாயிருக்கும்.
வெந்தக் காயை தாளிப்பில் கொட்டிக் கிளறினால் சுவையான பொரியல் 5
நிமிடங்களில் தயார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum