முள்ளங்கி பொரியல்
Page 1 of 1
முள்ளங்கி பொரியல்
தேவையானவை:
முள்ளங்கி -300கிராம்
வெங்காயம்- 2
முழுப் பூண்டு – 1
பச்சை மிளகாய் – 3
மல்லி,கறிவேப்பிலை-சிறிது
நல்லெண்ணெய் – 3டேபிள்ஸ்பூன்
கடுகு- 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 3டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
செய்முறை:
முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக கட் செய்து கொள்ளவும்.
வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும், மிளகாய் கீறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் பூண்டு வதங்கியதும், நறுக்கிய முள்ளங்கி சேர்த்து வதக்கவும், சிறிது உப்பு சேர்க்கவும். நன்கு பிரட்டி மூடி விடவும்.
நன்கு வதங்கியதும் திறந்து தேங்காய் துருவல் சேர்க்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விட்டு இறக்கவும்.
பூண்டு, வெங்காயம், தேங்காய் சேர்த்து செய்யும் பொழுது அது தனி ருசியோடு இருக்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum